பக்கம் எண் :

மலையாளம்37

மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள்
(1)
சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப்
பட்டுப் பிற தமிழ் நாடுகளுடன் பெருந் தொடர்பு
கொள்ளாதிருந்தமை.
(2)
12 ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம்
நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன்
மணவுறவு நிறுத்தியமை.
(3)
வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ
உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற்
கலப்பும்.
(4)
மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை.
(5)
மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக்
கல்லாமை.
(6)
மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல்.
மலையாளம் திரிந்த முறைகள்
(1)
முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல்
எ-டு: வந்தான் - வந்து.
(2)
மெலித்தல் திரிவு
எ-டுஎழுந்து-எழுந்நு, அங்கு-அங்ஙு, கழுகு - கழுங்ஙு,
குஞ்சி-குஞ்ஞி, வீழ்ந்து-வீணு.
(3)
நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடைநிலை
உன்னு எனத் திரிதல்
எ-டு:செய்கின்ற - செய்குன்னு - செய்யுன்னு.
(4)
வேற்றுமை யுருபுத் திரிவு.
எ-டு:அதினுக்கு - (அதின்கு) - அதின்னு, உடைய -
உடே- டே - றே.
(5)
போலித் திரிவு
எ-டு:நரம்பு - ஞரம்பு, செய்ம்மின் - செய்வின்.