|
(6) | கொச்சைத் திரிவும் தொகுத்தலும் | | எ-டு: உள்ள - ஒள்ள, மலை - மல, அகற்றுக-அகத்துக, | | இரு-இரி, புறா - ப்ராவு, கனா - கினாவு, வேண்டும் - | | வேணம், செய்யவேண்டும் - செய்யேண்டு, போக | | வேண்டும் - போகேணம். |
|
(7) | றகர ரகர வேறுபாடின்மை | | எ-டு: உறவு - உரவு. |
|
(8) | நிகழ்கால வினையெச்சத்திற்குப் பதிலாக 'வான்' | | 'பான்' ஈற்று வினையெச்சங்களும் அவற்றின் | | திரிபுகளும் வழங்கல். | | எ-டு: குடிப்பான் = குடிக்க, நடப்பான் - நடக்கான் = | | நடக்க, வருவான் = வர. |
|
(9) | சிறப்புச் சொற்கள் பொதுப் பொருளில் வழங்கல் | | எ-டு: வெள்ளம் (புதுப் பெருக்கு நீர்), = நீர். மூரி | | (கிழஎருது) = எருது, நோக்கு (கூர்ந்து பார்) = பார். |
|
(10) | சொற்களை ஒருமருங்கு பற்றிய பொருளில் வழங்கல் | | எ-டு: அதே = ஆம், வளரே = மிக, மதி = போதும்; | | வலிய = பெரிய. |
|
(11) | ஒருபொருட் பல சொற்களில் தமிழில் வழங்காத ஒன்றை | | வழங்கல் | | எ-டு: சொல் (த.) - பறை (ம.); கூப்பிடு (த.) - விளி (ம.) |
|
(12) | ஆய் என்னும் வினையெச்ச வீறு ஆயிட்டு என | | வழங்கல் | | எ-டு:சிவப்பாய் - சிவப்பாயிட்டு. |
|
(13) | நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை | | எ-டு:ஆயாள் (அவ் ஆள்), ஈ மூரி (இம் மூரி) |
|
(14) | ஏவல் வினைகள் பெரும்பாலும் வியங்கோள் வடிவில் | | வழங்கல். | | எ-டு: தா-தரிக, தர. |
|