|
(15) | துணை வினை வேறுபாடு | | எ-டு: பறையுவான் கழியும் (சொல்ல முடியும்), | | பறையுவான் கழியுன்னில்ல (சொல்லமுடியாது). |
|
(16) | செய்யும் என்னும் முற்று மூவிடத்தும் வழங்கல். | | எ-டு: ஞான், நீ, அவன் - போகும். |
|
(17) | றன்னகரம் தந்நகரமாக எழுதப்படல் |
|
(18) | வழக்கற்ற சொல் வழங்கல் | | எ-டு: கைநீட்டக் காசு, தம்பிராட்டி. |
|
(19) | புதுச் சொற்கள் | | எ-டு: மேடி = வாங்கு, வெடிப்பி = துப்புரவாக்கு. |
|
(20) | வினைமரபு வேறுபாடு | | எ-டு: முட்ட புழுங்ஙுக (அவிக்க), விளக்கு கெடுக்க | | (அணைக்க), முட்டுக் குத்துக (கொடுக்க), காலுற | | முறிக்க (வெட்டுக.), மடங்ஙி ( திரும்பி) வருக. |
|
குறிப்பு : | சேரநாட்டுக் கொடுந்தமிழாகிய மலையாளத்திலுள்ள இருவகைத் தமிழ்ச்சொற்களையும் வழக்கு வீழ்த்தற்கும் மலையாளத்தார் தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டு அதனால் அவர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்படாதபடியும், ஆரியர் வடசொற்களை மிகுதியாய்க் கலந்து மலையாளத்தைக் கெடுத்துத் தமிழுக்கு மிக அயன்மைப்படுத்திவிட்டனர். |
|
| மலையாளச் சொல் வரிசைகள் |
(i) பெயர்ச் சொற்கள் |
1. மூவிடப்பெயர் |
| தன்மை | முன்னிலை | படர்க்கை | தற்சுட்டு | | ஒருமை: | ஞான் | நீ | அவன், இவன்அவள், இவள்அது, இது | தான் | |
| பன்மை: | நாம்நம்மள்ஞங்கள் | நிங்கள் | அவர், இவர்அவ, இவ | தங்ஙள்தாங்ஙள்தாங்கள் | |