திரவிடத்தாய் | 2. வினாப் பெயர் | | | | ஆண் | பெண் | பொது | அஃறிணை | | ஒருமை: | எவன் | எவள் | ஆர் | எது, யாது, எந்து | | பன்மை: | | எவர்,யாவர் | யார் | எவ, யாவ | | | | | என்னது (த.) = எந்து (ம.) | | | 3. முறைப் பெயர் | | | | அப்பன், அம்ம, அம்மாயி (பாட்டி), மகன், மகள், மருமகன், மருமகள், பேரன் முதலிய முறைப்பெயர்கள் செந்தமிழ்ச் சொற்களாகும். | | | | மூத்தச்சன், மூத்தப்பன், பேரப்பன்; மூத்தம்ம, மூத்தச்சி; வலியச்சன் (பெரியப்பன்), வலியப்பன், இளையப்பன் குஞ்ஞச்சன் (சிற்றப்பன்), பெண்ணப்பன் (மாமன்), பெண்ணம்ம (மாமி), கெட்டியவன் (கணவன்), கெட்டியவள் (மனைவி) முதலிய முறைப்பெயர்கள் கொடுந் தமிழ்ச் சொற்களாகும். | | | | ஜ்யேஷ்டன், ஜ்யேஷ்டத்தி, அனுஜன், அனுஜத்தி முதலிய வடசொற் பெயர்கள் வழக்கூன்றியதால், அண்ணன், அக்கை, தம்பி, தங்கை முதலிய செந்தமிழ்ப் பெயர்கள் மலையாளத்தில் வழக்கு வீழ்ந்தன. | | | | அச்சி, அப்பச்சி என்னும் ஒருபான் முறைப்பெயர்கள் செந்தமிழ் நாட்டில் சில குலத்தாரிடை வழங்குகின்றன. இவையும் இவற்றின் ஆண்பால் வடிவங்களான அச்சன், அப்பச்சன் என்பனவும் ஒருங்கே மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன. | | குறிப்பு: | அத்தன்-அச்சன், அத்தி-அச்சி, த-ச, போலி. |
| | | 4. மக்கட் பெயர் | | | | அடியார், அப்பக்காரன், அப்பட்டன், ஆள், ஆள் கொல்லி, இடயன், இரப்பாளி, இளையவன், உடயவன், ஊமன். எளியவன், கணியான், கள்ளன், கன்னியாள், குட்டி (பிள்ளை), குடியன், குருடன், கூலிக்காரன், கொல்லன், சக்காள் (செக்கான்), செவிடன், செறியவன் (சிறியவன்), தச்சன், தாந்தோன்னி (தான்தோன்றி), |
|
|