திரவிடத்தாய் | வினையாகுவினை | | ஆகிரு (=ஆகியிரு), உண்டாகு, கொண்டாடு, இல்லாதே ஹோகு, பிட்டுபிடு, ஒடி ஹோகு, தெளுகொள் ஒப்பிக்கொள் , கொண்டுபரு (கொண்டுவா), கொண்டு கொள்ளு, வாங்கு, பீசாடு (வீசாட்டு) முதலியன. | | குறிப்புப் பெயரெச்சம் | | கெல (சில), ஹல (பல), கொஞ்ச, எல்லா, சன்ன (சின்ன), தொட்ட (=பெரிய), எளய (இளைய), ஹளே (பழ = பழைய), ஹொச (புது). | | குறிப்பு வினையெச்சம் | | தண்ணகெ (தட்பமாய்), நெட்டனெ, பக்கென (பொக்கென), பேகனெ (வேகமாய்), மெல்லனெ முதலியன. | | இடைச்சொல் | | சுட்டடிச் சொற்கள் | | ஆ, அகோ, அதோ, ஆக = அன்று, ஹாகெ (அப்படி), அந்து (அன்று), அந்த்த (அனைய), அந்த்து (அப்படி). | | வினாவடிச் சொற்கள் | | ஏ, ஏகெ (ஏன்), ஏன், எந்த்த (எனைய), எந்த்து (எப்படி), ஒ. | | குறிப்புச் சொற்கள் | | அய்யோ (ஐயோ), குய்யோ, மொர்ரோ (முறையோ), சீ, அம்மம்ம, ஜலஜல (சலசல), சும்மனெ, சுரீரென, சுறுசுறென, தளதள. | | தொடர்புச் சொற்கள் | | குறித்து, ஒளகெ (உள்ளே), கௌகெ (கீழே), முந்தெ, ஹிந்தெ (பின்பு), ஹொரத்தெ (புறத்தே), எதுரு (எதிர்), மேலெ, மேகெ, கூட, நடுவெ, பெளிகெ (வெளுக்க), முஞ்ச்செ (முந்தே), சுத்தலு (சுற்றிலும்), மொதலு, உள, கீழ், முந்தெ (முன்பு), ஹிந்தெ (பின்பு), ஹொறகெ (புறகே). |
|
|