உருத்தல் =
தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள். உரு - உருவு - உருபு = வேற்றுமை வடிவம்,
அதைக் காட்டும் இடைச்சொல். ஒ.நோ: அளவு - அளபு. உருவு - உருவம். தமிழிலக்கணம் ஆரிய
வருகைக்கு எண்ணாயிரமாண்டு முற்பட்டது.
உலவுதல் =
வளைதல், சுற்றுதல். உலா = நகரைச் சுற்றி வரும் பவனி. உலக்கை = உருண்ட பெரும்பிடி. உலம்வா -
உலமா. உலமருதல் = சுழலுதல். உலவு - உலகு = உருண்டையாயிருப்பது அல்லது சுற்றி வருவது. ஒ.நோ:
கொட்குதல் = சுற்றி வருதல். கொள் - கோள். உலகு - உலகம். லோக் என்னும் வடசொல்,
பார்த்தது அல்லது பார்க்கப்படுவது என்னும் பொருளது. அது நோக்கு என்னும் தென்சொல்லின்
திரிபாம்.
இனி, உலகம்
வட்டமாயிருக்கும் ஞாலம் (பூமி) என்றுமாம். ஒ.நோ: "கடல்சூழ் மண்டிலம்" (குறுந். 300).
உகரம் உயரத்தைக்
குறிக்கும் வேர்ச்சொல். எ-டு: உக்கம் = தலை, உவ்வி = தலை, உத்தி = ஒருவகைத் தலையணி.
உச்சி, உம்பர், உவண், உயர்.
உவண் = மேலிடம்.
உவணை = தேவருலகம். உவணம் = உயர்ச்சி, பருந்து, கலுழன், கழுகு. பருந்து உயரப் பறக்கும்
பறவைகளுள் ஒன்று. "உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" என்பது பழமொழி. உவணம் -
சுவணம் = பருந்து, கலுழன். கழுகு. உவணம் (சுவணம்) முல்லை நிலத்துப் பறவையாதலால், அந்
நிலத்தெய்வமாகிய மாயோனுக்கு ஊர்தியாகக் குறிக்கப்பெற்றது.
சுவணம் என்னும்
சொல்லை வடமொழியாளர் சுபர்ண என்று திரித்துப் பின்பு சு + பர்ண என்று பிரித்து, நல்ல இலை,
அழகிய இலையுள்ளது, அழகிய இலை போன்ற சிறகையுடையது, என்று பொருந்தாப் புளுகலாகக் கரணியங்
காட்டுவர். கடுகளவேனும் பகுத்தறி வுடையார், நகைச்சுவையான இச் சொற்பொருட் கரணியத்தைக்
காணின் நகாதிரார்.
கும்முதல் =
திரளுதல். கும் - குமர் - குமரன் = திரண்டவன், இளைஞன். குமரி = திரண்டவள், இளைஞை. ஒ.நோ: