பக்கம் எண் :

108தென்சொற் கட்டுரைகள்

என

என்பது, இளமைபற்றிச் சில மரப்பெயர்க்கும், புதுமை (முதன்மை) குறித்துச் சில தொழிற்பெயர்க்கும், அழியாமை குறித்துச் சில இடப்பெயர் பொருட் பெயர்க்கும் அடைமொழியாம்.

    குமரன், குமரி என்னும் தமிழ்ச்சொற்களை, வடவர் குமாரன் குமாரி என நீட்டி, முறையே தமிழ்ப் பொருளொடு மகன், மகள் என்னும் பொருளிலும் வழங்கிவருகின்றனர்.

  முள்  - முண்டு  - முண்டை  = முட்டை. முள் - முட்டு - முட்டை.
  முண்டு  - மண்டு  - மண்டி. மண்டியிடுதல் = காலை மடக்குதல்.
  மண்டு  - மண்டலம்      = வட்டம். வட்டமான பொருள்.
  மண்டலம்  - மண்டிலம்.        
  மண்டலம்  - மண்டலி.     மண்டலித்தல் = வளைத்தல்.

மண்டலம் என்பது இருக்குவேதப் பெரும்பிரிவின் பெயர். தமிழ்ச் செய்யுளில் எல்லாவடிகளும் அளவொத்துவரும் யாப்பு மண்டிலம் எனப்படும்.   

  "ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும்  
  குட்டமும் நேரடிக் கொட்டின என்ப"

 

   

(செய். 114)

  "மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும்  
  செந்தூக் கியல என்மனார் புலவர்"

 

   

(செய். 116)

என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். "என்ப", "என்மனார் புலவர்" என்னும் வழிநூன் மரபுரைகள், 'மண்டிலம்' என்னுஞ் சொல் முதனூற் குறியீ டென்பதைத் தெரிவிக்கும். முதனூல் ஆரிய வருகைக்கு முற்பட்டதென்பது முன்னரே கூறப்பட்டது.

    மண்டலம், மண்டிலம் என்னும் இருசொல்லும் வட்டமான பொருள் களையும், தோற்றத்தையும் செலவையும் காலத்தையும் இடத்தையும் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும் குறித்து வந்திருக்கின்றன. நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட் கொண்டது மருத்துவ நூல் கூறும் கால மண்டலம். தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்பன பழைமை யான இடமண்டலம். "மண்டிலத் தருமையும்" என்பது தொல்காப்பியம் (977).

    தள் - தாள் = மரஞ் செடி கொடி பயிர் புல்லின் தடித்த அடி; இலை பூவின் அடி தாளை ஒட்டிய பயிர் புல்லிலை; தாள் போன்ற கால், விளக்குத்தண்டு முதலியன.

    தள் - தண்டு = செடிகொடிகளின் திரண்ட அடி. (எ-டு: கீரைத்தண்டு), தண்டு போன்ற பொருள் (எ-டு: விளக்குத்தண்டு).

    தண்டு - தண்டான் = தண்டுக்கோரை. தண்டுதல் = தண்டுபோல் திரட்டுதல், பணத்தைத் திரட்டுதல்.