மந
மந்திரம் = இன்னது
ஆகவென்று உறுதியாய் எண்ணுதல், அங்ஙனம் எண்ணிச் சொல்லும் உரை.
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
(1434)
என்னுந் தொல்காப்பிய
நூற்பாவையும்,
"எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்" (குறள்.
666)
என்னும் திருக்குறளையும்,
திருமூலர் திருமந்திரத்தையும் மந்திரம் சொல்லிச் சவித்துவிட்டான், மந்திரத்தினால் வாயைக்
கட்டிவிட்டான் என்னும் வழக்குகளையும்; மந்திரி, மந்திரம் (சூழ்வினை) என்னும் அரசியற்
சொற்களையும், கூர்ந்து நோக்குக.
வாய்மொழி என்பது
மந்திரத்தின் மறுபெயர். நாலாயிரத் தெய்வப் பனுவலில் நம்மாழ்வார் அருளிச்செய்த முதலாயிரம்
திருவாய் மொழி யெனப் பெயர் பெற்றிருத்தல் காண்க.
ஆகவே, மந்திரம்
என்னும் சொல் தமிழில் அரசியல், மதவியல், இலக்கணம் ஆகிய முத்துறைக்குரியதாகும். சேர,
சோழ, பாண்டிய வரசுகள் வரலாற்றிற்கெட்டாத் தொன்மை வாய்ந்தவை. பண்டைநாளிற் கிழக்கத்திய
நாடுகட்குத் தமிழ்நாட்டொடு அரசியல் தொடர்பும் வணிகத்தொடர்பும் இருந்ததினால், மந்திரி
என்னும் சொல் மலேயா சீனம் முதலிய நாடுகளிலும் பரவியிருக்கின்றது.
Mandarin
என்னும் ஆங்கிலச்சொல் போர்த்துகீசிய வாயிலாய்ப் பிற்காலத்திற் புகுந்ததாகும். அதற்குமுன்
மேலையாரியத்தில் இச் சொல் இல்லை.
சமற்கிருத இரு படைகள்
1.
அடிப்படை |
-
|
வேத ஆரியம் |
2.
மேற்படை |
1)
|
வட திரவிடம்
(பிராகிருதம் |
|
2)
|
தென் திரவிடம் (தமிழொழிந்த
பஞ்ச திரவிடம்) |
|
3)
|
தமிழ் |
பிராகிருதம் என்பது.
வேதக் காலத்தில் வட இந்தியாவில் வழங்கிய வட்டார மொழிகள். பிராகிருதம் = முந்திச் செய்யப்பட்டது.
சமற்கிருதம் என்பது, வேதமொழி யிலக்கண வமைதியைப் பெரும்பாலும் தழுவி, அம் மொழியொடு
பிராகிருதத்தையும் திரவிடத்தையும் (தென் திரவிடம்) தமிழையும் கலந்து செய்த அரைச் செயற்கையான
இலக்கிய நடைமொழி யாகும். சமற்கிருதம் = நன்றாய்ச் செய்யப்பட்டது.
பிராகிருதம் என்னும்
சொல் பாகதம் என்றும், சமற்கிருதம் என்னும் சொல் சங்கதம், சனுக்கிரகம் அல்லது சானுக்கிரகம்
என்றும், திரியும்.
|