ப
பிராகிருதம் சமற்கிருதத்திற்கு
முந்தியதென்பது அதன் பெயராலும் மொழியாலும் தெளிவாய்த் தெரியினும், சமற்கிருதத்தினின்று
பிராகிருதம் திரிந்ததாகப் பேதைமை மிக்க பழங்குடி மக்களையும் ஆராய்ச்சியில்லாத அயலாரையும்
வடமொழியாளர் மயக்கி வருகின்றனர். அதற்குக் கரணியம் (காரணம்), சமற்கிருதச் சொற்கள் திரிந்தும்
திரியாமலும் பாகதத்தில் வழங்குவதே.
|
எ-கா: |
திரியாதவை |
திரிந்தவை |
|
|
சஷ்டி
(sashti) |
சட்டி
(satihi) |
|
|
தர்ம
(dharma) |
தம்ம
(dhamma) |
திரிந்து
வழங்குவன, தமிழில் வழங்கும் திட்டாந்தம் (த்ருஷ்டாந்த), சோத்தம் (ஸ்தோத்ர) என்னும்
வடசொற்கள் போன்றவையே. அவை யாவும் அடிப்படைச் சொற்களல்ல. பிராகிருதத்திற்கும் அடிப்படை
தமிழே ஆயினும், அது விளங்கித் தோன்றாதவாறு அத்துணை வட சொற்கள் அதிற் கலந்துள்ளன. வடசொற்
கலப்பு தமிழில் இருப்பதைவிடத் திரவிடத்தில் மிகுதியாகவும், திரவிடத்தில் இருப்பதைவிடப்
பாகதத்தில் மிகுதியாகவும், இருக்கும். வடக்கே செல்லச் செல்ல வடசொற் கலப்பு மிகும் என அறிக.
வேத ஆரிய மொழி வழக்கற்றுப் போனதனால், அது பழங்குடி மொழிகளிற் கலந்து புல்லுருவியும் உண்ணியும்
பேனும் போல் மேலுண்ணியாய்
(Parasite)
இருந்து வருகின்றது. ஆரியச் சொல் வேரூன்றியவுடன் அதற்கு நேரான தென்சொல் வழக்கற்றுப்
போம். வழக்கற்ற சொல் இலக்கியத்தில் இடம் பெறாவிடின் மறைந்து மீளா நிலையடையும்.
பிராகிருதம் என்னும்
வடதிரவிடத்திலுள்ள தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் ஈறு திரிந்தே வழங்கும்.
|
எ-டு : |
தமிழ் |
பிராகிருதம் |
தமிழ் |
பிராகிருதம் |
|
|
அச்சன் |
அஜ்ஜ |
கட்டை |
கட்ட |
|
|
அத்தை |
அத்தா |
கம்பம் |
கம்ப |
|
|
ஏழகம் |
ஏளக |
நேயம் |
நேயம் |
|
|
ஐயன் |
அய்ய |
வட்டம் |
வட்ட |
பிராகிருத வழிப்பட்ட
மொழிகளுள் ஒன்றான இந்தியின் அடிப்படையும் தமிழே.
|
எ-டு :
|
தமிழ் |
இந்தி |
|
|
அம்மா |
மா |
|
|
ஆம் |
ஹாங் |
|
|
இதோள் (இங்கே) |
ஹிதர் |
|
|
உதோள் (உங்கே) |
உதர் |
|
|
உம்பர் |
ஊப்பர் |
|