பக்கம் எண் :

112தென்சொற் கட்டுரைகள்

தம
தமிழ் இந்தி தமிழ் இந்தி
கால் (கருமை), } காலா நேரம் தேர்
காள்   நோக்கு தேக்(கு)
கொச்சு   குச்(சு) படி (கீழிரு) பைட்
செல்   சல்(ch) படி (வாசி) பட்
சிட்டு (சிறு)   சோட்டா (ch) படு (பெரிய) படா
தண்   தண்டா பழம் பல்
தத்தை   தோத்தா புகல் போல்(b)
தா   தே வத்து(தெலுங்கு) மத்

    சமற்கிருதத் திரவிடச் சொல் முந்திய கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டது.

சமற்கிருதத் தமிழ்ச் சொற்கள்

    சமற்கிருதச் சொற்களெல்லாம், கீழ்ப்படையும் மேற்படையும் பற்றி,

    1) பழஞ்சொல்,

    2) புதுச்சொல் என்றும்;

    மொழி வகை பற்றி,

    1) ஆரியச் சொல்

    2) தமிழ்ச் சொல் என்றும்;

    வேர்ப் பொருட் கரணியம் உண்மையும் இன்மையும் பற்றி,

    1) கரணியக் குறி

    2) இடுகுறி என்றும்;

    இவ்விரு பாலாய்ப் பகுக்கப்படும்.

    பழஞ்சொல் என்பன வேத ஆரியம். இடுகுறிகள் 'ஆனந்த பைரவி', 'கலியாணி', 'சங்கராபரணம்', 'தன்னியாசி', 'நாத நாமக் கிரியை', முதலிய பண்ணுப் பெயர்கள் போன்றவை.

    தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு மூவகையாய் வகுக்கப் பெறும்.

  (1) முழுச்சொல்  : எ-டு : அகவு, தூது.
  (2) வேர்ச்சொல்  : எ-டு : பண் - பாணி (கை), மன் - மநு.
  முன்னுதல்  = கருதுதல். முன் - முன்னம் - முனம் - மனம்.
  முன்-மன் (Man)  = சிறப்பாகக் கருதும் உயிரினம்
  மன்பதை  = மக்கட் கூட்டம்.
  (3) புனைசொல்:   எ.டு: அனுமானம், கும்பகாரன், ஆதா,
  அல்லுதல்  = பொருந்துதல், பொருத்துதல், பின்னுதல், முடைதல்.