பக்கம் எண் :

118தென்சொற் கட்டுரைகள்

New Page 1

(2) தவற்றுப் பொருட் கரணியங் கூறல்
  எ-டு :s
  சொல்  உண்மைக் கரணியம் தவற்றுக் கரணியம்
   

(தமிழ்)

   (வடமொழி)
  அரசன் அரணானவன், விளங்குபவன்
    பாதுகாப்பவன் (rang, ranj)
    (அரவு = அரசு)  
  குமரன் திரண்ட இளைஞன் எளிதாய் இறப்பவன்
    (கும் - குமர் - குமரன்) (கு + மார);விரும்பப்படுபவன்(கம்).
  சிவன் செந்நிறத்தான் எல்லாவுயிர்களும் இருத்
(சிவ - சிவம் - சிவன்) தற்கிடமானவன் (சீ),
நன்மைசெய்வன் (ச்வி).
பல்லி (சுவரிலும் மரத்திலும் சொல்லுவது (பல்.)
ஒட்டிக்கொண்டிருப்பது.
(புல் - புல்லி - பல்லி)
பாண்டியன் பழையன் (பண்டு) பாண்டவன் (பாண்டு).
மீன் - மீனம் மின்னுவது (மின்) இறப்பது, திரிவது (மீ)
வடவை வடமுனை நெருப்பு பெட்டைக்குதிரை முகத்
(வடம்) தில் தோன்றுவது (வடவா முகம்).
குறிப்பு : சிவம் என்னும் சொற்கு நன்மைப் பொருள் தமிழிலும் உண்டு. செம்மை = நன்மை.
(3) தவறாக மூலங்காட்டல்
எ-டு :
சொல் உண்மையான மூலம் தவறான மூலம்
கமலை-கவலை நீரிறைக்கும் ஆலை, ஆவை (பசுவை)ப்
பயிர்த்தொழில் ஆலை. பூட்டியிறைக்கும்
(கம்+ஆலை). ஏற்றம் (கபிலை).
அவிழ்  = அவிந்த சோற்றுப் பருக்கை, சோறு.
அவிழ்  - அவிழ்து  - அமிர்து  - அமுது = சோறு.
மருவுதல்  = தழுவுதல், மரு  - மார்  = நெஞ்சு, முலை. மார் - மார்வு -
மார்பு  - மார்பம்.
மரு  - மருமம்  - மம்மம்  - அம்மம் = முலை, முலைப்பால்.
அம்மம்  - அமுது  - அமிழ்து  - அமிழ்தம் = பால்.
அமிழ்து  - அமிர்து  - அமிர்தம்  = பால்.

    சோறு என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், பால் என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், அம்ருத என்னும் வட சொல்லை மூலமாகக் காட்டுவது முற்றுந் தவறாம்.