பக்கம் எண் :

சமற்கிருதவாக்கம் - சொற்கள்119

New Page 1

(4) தவறாகத் தொடர்புபடுத்தல்

    பல தமிழ்ச் சொற்கள், ஒருமருங்கு வடிவொப்புமைபற்றியும் பற்றாதும், வட சொற்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

  எ-டு :
  தமிழ்ச்சொல் வடசொல்
  அச்சன் (அத்தன்) = தந்தை ஆர்ய = ஆரியவரணத்தான்
  ஆசிரியன் (ஆசு + இரியன்) ஆச்சார்ய (ஆ + சார) =
  = குற்றத்தைப் போக்குபவன். ஒழுக்கத்தைக் கற்பிப்பவன்.
  ஐயன் (ஐ + அன்) = பெரியோன் ஆர்ய = ஆரிய வரணத்தான்
  கம்பம் (கம்பு + அம்) = உயரமான ஸ்தம்ப (ஸ்தம்ப்) = ஊன்றிய
  பெரிய கம்பு தூண்.
  கேரளம் (சேர - சேரலம் - நாளிகேரம் (= தென்னை)
  கேரளம்) = சேர நாடு, மலை மிகுந்திருக்கும் நாடு.
  யாள நாடு  
  பார்ப்பான் = நூல்களைப் பிராமணன் = பிரமத்தை
பார்ப்பவன் அல்லது பிராமணத்தை அறிந்தவன்.

குறிப்பு: பார்ப்பனன் என்னும் வடிவில் 'அனன்' (அன் + அன்) என்பது ஈறு. வினையாலணையும் பெயர்க்கு மூலமான
வினைமுற்று 'ஆன்' ஈறு போன்றே 'அனன்' ஈறு கொள்ளும்.

  எ-டு : இ.கா. நி.கா. எ.கா.
    வந்தனன் வருகின்றனன் வருவனன்
    வந்தனள் வருகின்றனள் வருவனள்
    வந்தனர் வருகின்றனர் வருவனர்
    வந்தன்று  -  -
வந்தன வருகின்றன வருவன

    வந்தன்று என்பது வந்தனது என்பதன் திரிபாம்.

(5) தலைகீழ்த் திரிப்பு

  தமிழ் > பிராகிருதம் > சமற்கிருதம்  
  வட்டம் (வள்) வட்ட வ்ருத்த  
  மேழகம் - ஏழகம். ஏளக ஏலக  
  நேயம் (நெய்) நேயம் ஸ்நேக (ஸ்நிக்)  
  மாதம் (மதி)  - மாஸ  

    இவற்றைத் தலைகீழாகத் திரிப்பது வடநூலார் இயல்பு.