New Page 1
குறிப்பது; அம்பர் என்னும்
சொற்போல. அ - அம்பர் - அம்பரம். இகரச் சுட்டடியாப் பிறந்த இகம், இம்பர் என்னும்
சொற்கள் அண்மைச் சுட்டாய் இவ்வுலகத்தைக் குறித்தல் காண்க.
விண்ணுலகையும்
மண்ணுலகையும் சேய்மை அண்மைபற்றி அவ்வுலகம் இவ்வுலகம் என்பது மரபு.
"அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு" (குறள். 247)
என்றார்
திருவள்ளுவரும்.
வீடு என்னும்
முத்திப் பெயர் இல்லத்தை உணர்த்தினாற்போல, அகம் என்னும் பெயரும் இல்லத்தை உணர்த்தும்.
வீடு = விடுதலை; விடுவது வீடு. பிறவித் துன்பத்தினின்றும் விடுதலை செய்வது பேரின்ப வீடு.
வெயின் மழைத் துன்பத்தினின்றும் விடுதலை செய்வது இவ்வுலக வீடு.
இல் என்னும்
வீட்டுப் பெயர் ஏழாம் வேற்றுமை உருபாய் உட்பாகத்தைக் குறித்தாற்போல, அகம் என்னும்
வீட்டுப் பெயரும் உட்பாகத்தையும் உள்ளத்தையும் குறிக்கும் 'அகம்என் கிளவி' எனத்
தனித்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்துள்ளும் கூறப்பட்டுள்ளது.
காரம்: கரி
என்னும் வினையடியாப் பிறந்த தொழிற்பெயர். கரி +
அம் = காரம்; முதனிலை
திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்.
cf:
படி + அம் = பாடம். தவி + அம் = தாவம்.
கரித்தல்
மிகுதல். காரம் மிகுதி.
கரி என்பது கடி
என்னும் உரிச்சொல்லின் திரிபு.
ட-ர, போலி.
ஒ.நோ: படவர் - பரவர். முகடி - முகரி.
உப்புக்கரிக்கும்,
உப்புக் கடுக்கும் என்பன ஒருபொருள்பற்றிய உலக வழக்கு. கடி என்னும் உரிச்சொற் பொருள்களுள்
மிகுதியும் ஒன்று.
காரம் என்னும்
சொல் முதலாவது மிகுதியை உணர்த்திப் பின்பு உறைப்பு மிகுதியை உணர்த்தும்.
கரி என்னும்
சொல்லே அதி என்னும் உபசர்க்கம்
(prefix)
பெற்று அதிகரி என நிற்கும்.
அதிகரிப்பது அதிகாரம்.
அதி என்பது ஒரு
மிகுதிப் பொருளுபசர்க்கம்
(intensive prefix).
அதிகாரத்தை (ஆணை
மிகுதியை
or
ஆற்றன் மிகுதியை) உடையவன் அதிகாரி.
ஒரு நூலின்
பெரும்பாகம் அதிகாரம்.
அகம் கரிப்பது
அகங்காரம். அகங்காரம் - ஆங்காரம்.
அகண்டம்:
அ + கண்டம். அ, எதிர்மறை உபசர்க்கம்; அல் என்பதன் குறுக்கம். அல் என்னும் எதிர்மறைச்
சொல்லே
un
என்று ஆரியமொழிகளில் திரியும். இல் என்பது
il, in, im
என்று திரியும்
|