பக்கம் எண் :

22தென்சொற் கட்டுரைகள்

அபச

    அபசாரம்; அப + சாரம். அப, அவ என்பதன் திரிபு.

    அவம் = அழிவு ; அவி பகுதி.

    சரி + அம் = சாரம், தொழிற்பெயர்.

    சலி - சரி, போலி. ல - ர

    cf. பந்தல் - பந்தர். கூதல் - கூதர்.

    சரித்தல் = அசைதல், நடத்தல், ஒழுக்கம்.

    அபசாரம் செய்பவள் அபிசாரி.

 

+

சரி

=

ஆசரி

ஆசரி

+

அம்

= ஆசாரம்.

 

அனு

+

சரி

அனுசரி அன்  + ஆசாரம அனாசாரம்.

    ஆ, அனு உபசர்க்கங்கள். ஆசாரத்தை யுடையவன் ஆசாரி, ஆசாரியன்.

    அபதூறு: அப + தூறு.

 

அவம்

=

அவி

+

அம்,

தொழிற்பெயர்.

 

 

 

 

அவிதல்

=

அழிதல்.

அவ - அப.

 

தூறுவது

-

தூறு;

முதனிலைத் தொழிற்பெயர்.

 

தூறு

=

சிந்து.

 

 

 

 

 

 

    மழை தூறுவதுபோலப் பழிமொழியைத் (அவமான சொல்லைத்)

    தூற்றுவது அவதூறு.

    அபமரணம்: அப + மரணம். அவ - அப.

    மரணம் = மரி + அணம், அணம் தொழிற்பெயர் விகுதி.

    மடி - மரி, (போலி) ட - ர.

    cf. கடி - கரி, படவர் - பரவர்.

    மரியாதவர் அமரர்.

    அபரம்: அ + பரம். அ, அல் என்பதன் குறை.

    பரம் = பர + அம். பரத்தல் = விரிதல், பெருத்தல், மேற்படுதல்.

    பரம் என்பது மிகுதிப் பொருளில் மேலிடத்தை யுணர்த்தும். இதன் பரியாயச் சொல்லாகிய மிகல் என்னுஞ் சொல்லும் அங்ஙனமே.

    மிகு - மிகல் - மேல். மேலிடம் உயரத்தின் மிகுதியாகும் நட்டுக்குத் தலாய் (vertical) ஒரு பொருள் மிக்கிருக்கும்போது உயரமா யிருத்தல் காண்க.

    பரம் = மேல். அபரம் = கீழ்.

    பரன் = மேலானவன்  - கடவுள்.