பக்கம் எண் :

வடமொழித் தென்சொற்கள்21

cf

    cf. காஞ்சி - காஞ்சீ.

    காஞ்சி - ஒரு தமிழ்நாட்டு மரப்பெயர். பின்பு தானியாகு பெயராய் ஒரு நகரைக் குறிக்கும்.

    'ஈயீ றிகரமும்' என நன்னூலார் கூறியது மொழிபெயர்க்கப்படாத வடமொழிச் சிறப்புப் பெயர்கட்கேயன்றிப் பிற சொற்கட் கன்றெனத் தெளிக.

    அந்தோ. அந்தோ! இரக்கக் குறிப்பு. அத்தோ என்பதன் திரிபு.

அத்தன் - அத்தோ! அந்தோ!

    அத்தோ என்பது அத்தன் என்பதன் விளி. இரக்கக் குறிப்புக ளெல்லாம் பெரும்பாலும் தாய் தந்தை பெயர்களின் விளியாகவே யிருக்கும். துன்பம் வருங்கால் தாய்தந்தையரையே விளிப்பது மக்கள் வழக்கம், அவரினுஞ் சிறந்தார் பிறரின்மையின்.

    இரக்கமென்பது தற்பொருட் டிரங்கலும் பிறர்பொருட் டிரங்கலுமென இருவகை. இரக்கம் = அழுகை, வருத்தம்.

    எ-டு:     தந்தை பெயர்          தாய் பெயர்

             அப்பன் - அப்பா! அம்மை - அம்மா!

             அச்சன் - அச்சோ!      அன்னை - அன்னோ!

             அத்தன் - அத்தோ! - அந்தோ!

             ஐயன் - ஐயோ!

    அந்தோ என்பது வடசொல்லு மன்று; சிங்களச் சொல்லுமன்று.

    அபங்கம்: அ + பங்கம்.

    அ - அன் என்பதன் குறை.

    பங்கம் = பங்கு + அம். பகு - பக்கு - பங்கு.

    பகுக்கப்படுவது அல்லது பக்கிருப்பது பக்கு. பக்கு என்பதன்

    மெலித்தல் பங்கு. cf. போக்கு - போங்கு.

    பக்கு என்பது பகுதி யிரட்டித்த தொழிற்பெயர்; பாட்டு,

    திருட்டு என்பன போல.

    பக்கு, பங்கு = பாகம், குறை, பிளவு.

    பக்கு + அம் = பக்கம்.

    பங்கு + அம் = பங்கம்; அம் சாரியை.

    மானபங்கம் = மானக்குறை.

    நிலம் ஏரால் அல்லது மண்வெட்டியாற் பகுக்கப்பட்டுச் சேறாவதால்,

    சேறு பங்கமெனப் பட்டது. 'பங்கப் பழனத் துழுமுழவர்' - புகழேந்தி.

    பங்கி - பங்கையுடையது.