அருபம்.
உருபத்தை யுடையவன்
உருபி. உருபி - உரூபி.
அருபமானவன் அருபி.
அருபி - அரூபி.
உரு = வடிவம்,
முதனிலைத் தொழிலாகுபெயர்.
உரு என்னும் சொல்
வடிவுப் பொருளில் உலகவழக்கில்
மிகுதியும்
வழங்கிவருகின்றது.
உரு = வடிவுடைப்
பொருள்.
சுற்றுரு =
தாலிக்கொடியில் தாலியோடு சேர்ந்த பல வடிவான
சிறுநகைகள்.
கழுத்தைச் சுற்றியுள்ள உருக்கள் என்பது பொருள்.
உருப்படி = ஒரு
பொருள்.
உருவாகு = உண்டாகு.
உருப்படு = வளர்,
தேறு, பெரியவனாகு.
உருக்குலை, உருமாறு =
வடிவுமாறு, மெலி.
|
உருச்சேவி |
= |
விக்கிரகத்தை வணங்கு. |
|
உருப்போடு |
= |
விக்கிரகத்திற்குரிய
மந்திரம் ஜெபி. |
|
உருவேற்று |
= |
மந்திரம் ஜெபி, உபதேசி. |
|
உருபி |
= |
உருவத்தையுடையது. ருப்பி,
Hindi, Skt. and
English. |
அமங்கலம்: அ +
மங்கலம்.
நன்கலம் -
(நங்கலம்) - மங்கலம்.
நன்கலம் - தாலி,
சிறந்த அணி.
நன்கலம் அணியத்தக்க
நிலை மங்கலம்.
நன்கலம் - மங்கலம்.
ந - ம, போலி.
.
நாம் - மேமு(தெலுங்கு).
மாட்டுப்பெண் -
நாட்டுப்பெண் ம-ந, போலி.
முனி-நுனி. }
மங்கலத்தை யுடைவள்
மங்கலி - மங்கலை.
மங்கலம் -
மங்கலியம் - மங்கிலியம் - மாங்கலியம் - மாங்கிலியம்.
மங்கலம் - மங்களம்.
மங்கலம் =
மங்கலியம் அணிகின்ற திருமணம்,
திருமணம் போன்ற
நல்வினை.