பக்கம் எண் :

வடமொழித் தென்சொற்கள்25

    எ-டு: மண்ணுமங்கலம் = நன்மை.

    அமராபதி: அமரர் + பதி.

    பதி = பதிந்திருக்கும் இடம்.

    பதிதல்= தங்கியிருத்தல், பொருந்தியிருத்தல், நிலையாயிருத்தல்,

    வசித்தல்.

    பதி - வதி. ப - வ, போலி. cf. பகு-வகு.

    பதி - ஊர் , நகர் (முதனிலைத் தொழிலாகுபெயர்).

    அமராபதி - அமராவதி.

    பதி + அம் = பதம்.

    அமரர் + பதம் = அமராபதம்.

    பதி - bad - (Hindi) -பாத்து.

    ஐதராபதி - Hyderabad - ஹைதராபாத்து.

    அமாத்தியர்: அண்மை + ச் + அர் = அண்மைச்சர் - அமைச்சர்.

    cf. அரண்மனை - அரமனை (உலகவழக்கு).

    அமைச்சர் அரசனுக்கு அண்மையி லிருப்பவர்.

    அமைச்சர் - அமாத்தியர்.

    அமுது : அவிழ்-அவிழ்து-அமுது.

    அவிழ்தல் - விரிதல்.

    அவிழ்  = சோற்றுப்பருக்கை, வெந்து விரிந்த அரிசி.

    அவிழ்து = சோறு.

    அவிழ்து - அமுது. வ-ம, போலி.

    அவிழ்து + அம் = அவிழ்தம் - அமுதம்.

    அமுது படைத்தல் = சோறிடுதல்.

    அம்பிகை: அம்மை-அம்மாள் -அம்மா - அம்பா- அம்பிகா -அம்பிகை.

    அம்பு : கம் - ஓர் ஒலிக்குறிப்பு.

    கம் = நீர், ஒலிப்பது.

    கம்-அம். cf. கனல் - அனல், தழல் - அழல்.

    அம் - அம்பு (கடைவிரி - Epenthesis).

    cf. உடல் - (உடம்)-உடம்பு.

அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா, செந்தமிழ்ச்

    செய்யுள்களுள் ஒன்றாகும்.