பக்கம் எண் :

28தென்சொற் கட்டுரைகள்

அவ

    அவி: அவி = உணவு, நெய் (அவிக்கப்படுவது).

    அவிநயசாலை: அபி + நயம் + சாலை.

    அபி மிகுதிப் பொருளுணர்த்தும் ஒரு வடமொழி உபசர்க்கம்.

    நயம் = நேர்த்தி. (தென்சொல்) நயம் - nicety: ய-ச, போலி.

    அபிநயம் = மிக நேர்த்தியான ஆட்டம் அல்லது ஆட்டத்தின் உறுப்பு.

    அபிநயம் ஓர் இருமொழித் தொடர் (Hybrid).

    நை + அம் = (நையம்) - நயம், தொழிற்பெயர்.

    cf. வை + உ = வயவு.

    நைதல் = நுட்பமாக நொறுக்கப்படுதல்.

    நயம் = நுட்பம். அபிநயம் = நுட்பமான ஆட்டம்.

    சாலை: சால் + ஐ = சாலை.

    சாலுதல் = நிறைதல். பருத்தல், விசாலித்தல்.

    சால (நிகழ்கால வினையெச்சம்) மிகுதிப் பொருளுணர்த்தும் உரிச்சொல்.

    சாலை = அகன்ற பாதை, அகன்ற கூடம்.

    பாடசாலை = பாடம் படிப்பிக்கப்படும் கூடம்.

    சாலை - saloon, hall.

    சால் + பு = சால்பு = நிறைவு, பெருந்தன்மை.

    சால் + வை = சால்வை (shawl), உடம்பு நிறையப் போர்ப்பது.

    சான்றோர் = அறிவு நிறைந்தோர், வீரம் நிறைந்தோர்.

    சாலு = நிறையும், போதும் (தெலுங்கு).

    அவிவேகம்: அ + வி + வேகம்.

    அ - எதிர்மறை உபசர்க்கம். வி - மிகுதிப்பொருள் உபசர்க்கம்.

    வேகு + அம் = வேகம் = நெருப்பு, எரிதல்.

    வேகம் = அறிவு, நெருப்பின் தன்மையுள்ளது.

    நெருப்பு எங்ஙனம் ஒரு பொருளை விரைந்து பற்றுமோ அங்ஙனமே அறிவும் ஒரு பொருளை விரைந்து பற்றும். அறிவும் விரைவுமுள்ளவனைச் சூட்டிக்கையுள்ளவன் என்பது உலக வழக்கம்.

    ஆகாயம்: ஆ + காயம். ஆ, முதல்விரி (prothesis).

    "காயப் பெயர்வயின்" என்றார் தொல்காப்பியர்.

    கயம் = பள்ளம், குளம், கறுப்பு. ஆழமான நீர் கறுப்பதியல்பு.