அர
அராகம் =
இராகம். cf.
அறு - இறு.
இராகம் = பண்,
விருப்பம்.
பண் இனிமையா
யிருத்தலின் எவருக்கும் விருப்பாம்.
cf. Music - that which
amuses. அனுராகம் =
காதல். அராகம் முடுகிய ஓசையுள்ள ஒரு கவியுறுப்பு, செந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்துட்
கூறப் பட்டுள்ளது.
அராகம் எனினும்
வண்ணகம் எனினும் ஒக்கும்.
வண்ணகம் = பண்,
ஓசை.
அராகம் என்பது
இயற்றமிழ்க்கன்றி இசைத்தமிழ்க்கும் இன்றியமை யாததோர் சொல்லாம். இசைத்தமிழும்
பொருளிலக்கணமும் ஆரிய வருகைக்கு முன்பே தமிழர்க்கிருந்தவை.
அலட்சியம்:
அ + லட்சியம்.
இலக்கியம் -
லக்ஷியம்.
இலக்கியம் -
குறி, உதாரணம் ,
(Literature) இலக்கு
பகுதி.
அவமதி: அவம்
+ மதி
மதித்தல் =
அளவிடுதல், உயர்வா யெண்ணுதல்.
மதி = அறிவு,
பொருள்களை அளந்தறிவது.
மதி =
அளந்தறியும் சரக்கு. ஏற்றுமதி, இறக்குமதி.
மதித்தல் =
நிதானித்தல், மனத்தாலளத்தல்.
மதி = சந்திரன்,
ஒருமாத காலத்தை அளவிடுவது
மதி + அம் =
மாதம்.
மதி + உ = மாது
உணவை அளவாய்ப் பகிர்பவள்.
மதி + அர் =
மாதர் } பெண், தாய்.
மாது - மாதா .
Skt.
மதி = அறிவு,
knowledge.
சம்மதி = இசைவு,
அறிந்து இசைவது.
அனுமதி = உத்தரவு,
அறிந்து விடுப்பது.
மதி =
மதித்தளிக்கும் பரிசு, வெகுமதி.
மதி + அம் =
மதம், கடவுளை அல்லது வீட்டைப்பற்றிய மதிப்பு
அல்லது கொள்கை.
அவலட்சணம்:
அவம் + லக்ஷணம்.
இலக்கணம் =
லக்ஷணம். இலக்கு - பகுதி
இலக்கணம் =
இலக்கியத்தின் ஒழுங்கு அல்லது அழகு.
|