முகம் |
= 1. பக்கம் - வடக்கு
முகம். |
|
= 2. எதிர் - காற்று முகம். |
|
= 3. முன் பக்கம். |
துறைமுகம் |
= நெய்தல் நகர்க்கு
முகம்போல்வது. |
நூன்முகம் |
= நூலுக்கு முகம் போல்வது. |
திருமுகம் |
= முகம்போலப் பேசும்
கடிதம். |
ஒருமுகம் |
= ஒருநோக்கு. நேர்முகம் -
நேர்ச்சி. |
போர்முகம் |
= போர்க்களத்தின்
முன்பக்கம். |
முகதலை |
= சேலையின் முன்பக்கம். |
முகம் |
= மேற்பக்கம். இலைமுகப்
பைம்பூணிறை. |
முகமன் |
= முகஸ்துதி. |
முகத்தல் |
= தன் பக்கத்திற்
கொள்ளுதல். |
முகவை |
= முகத்தலளவு. |
முகில் |
= மேகம், நீரை முகப்பது. |
முகப்பு |
= 1. ஓர் கொடியின்
முன்பக்கம். |
|
2. ஒரு கட்டடத்தின்
முன்பக்கம். |
முகம் |
- முகி-முகிழ். முகிதல் -
கூடுதல். |
முகிழ் |
- அரும்பு, மூக்குப்போலக்
குவிந்தது. |
முகிழ் |
- மொக்குள் - மொக்கு. |
முகிழ் |
- முகை, முகிழ்த்தல =
தோன்றுதல். |
முகிழ் |
- மூழ். மூழ்த்தல் =
அரும்புதல் போல வாய் மூடுதல். |
மூழ் |
- மூடு-மூ - மூதல் = மூடுதல். |
முகம் |
- முகர் = 1. முகம். 2.
முகத்தையுடைய முத்திரை. |
முகர் |
- முகரை - முகம்.
(தென்னாட்டு வழக்கு.) |
முகர் |
- முகரா - மொகரா - அரசன்
முகத்தை யுடைய ஒரு நாணயம். |
முகம் |
= திரம் = (முகத்திரம்)
மோதிரம், முகத்தை யுடையது. |
முகம் |
= திரை =
முகத்திரை-முத்திரை, முகத்தை யுடையது. திரம்-திரை. |
முகம் |
= நுகம் =
yoke,
வண்டியின் முகத்திலிருப்பது, |
முகக்கோல் |
- மோக்கோல் -
மோக்கால். |