பக்கம் எண் :

வடமொழித் தென்சொற்கள்37

New Page 1

முகம்

-

முகன். முகனை-மோனை - சீர்முகத்திலுள்ள எழுத்துகள் ஒன்றி வருதல்.

முகன்

-

முன், இடைக்குறை. முன்றானை-முந்தாணி.

முன்

-

முன்னே, முன்னை-முன் + ஐ = முனை, போர்முனை.

முன்

-

முன்பு-முன் + இ = முனி-நுனி, நுதி. முனை-நுனை.

முன்

-

முந்து-முன்று-முந்தல்-முதல், இடைக்குறை.

முதல்

+

இ = முதலி; முதலி + ஆர் = முதலியார்.

முதல்

+

ஆளி = முதலாளி. முதன்மை-முதுமை.

        முதியோர், முதுகுடி.

        மூதூர், மூதுரை.

        இங்ஙனம், முகம் என்னும் சொல், பகுதி யுடையதாயும் முதலாவது மூக்கையும் பின்பு முகத்தையும் குறிப்பதாயும், நூற்றுக்கடுத்த திரிசொற்களை (Derivation)யுடையதாயும் தமிழிலுள்ளது; வடமொழியிலோ பகுதியற்றதாய் வாய் என்னும் ஒரே பொருள் யுணர்த்துவதாயுள்ளது. ஆதலால், முகம் என்பது தென்சொல்லாதல் தெற்றென விளங்கும். வடமொழிக்கும் தென்மொழிக்குமுள்ள பொதுச் சொற்களை வடசொல் அல்லது தென்சொல் என்று கண்டறிதற்குக் கால்டுவெல் கண்காணியர் (Bishop Caldwell) கூறிய விதியறிந்து கடைப்பிடிக்க.

மூஞ்சு +  எலி = மூஞ்செலி - மூஞ்சுரு. தூங்கு மூஞ்சி - ஓர் மரம். அழுமூஞ்சி, அடுமூஞ்சி.

        முகம் = முன், முகாமை-முதன்மை, தலைமை.

        முகவரி = under முகவெட்டி.

        வருணம்

வரி+அணம் = வரணம் + cf. மரி + அணம் = மரணம்.
வரணம் - வர்ணம் - வண்ணம் - வருணம்.
வண்ணம் - பண்ணம் - பண்ணத்தி. cf.வண்டி- பண்டி.
பண்ணம் - பண். வண்ணம் - வண்ணகம்.
வரித்தல் = வரைதல், எழுதுதல், பாடுதல்.
     

வரி என்பது இசைப்பாடல்களில் ஒன்று, அது ஆற்றுவரி கானல்வரி முதலிய பலவகைப்படும்.

வர்ணம்

=

 நிறம், varnish, E.

 

=

குலம், நிறத்தினா லறியப்படுவது.

 

=

செய்யுள் அல்லது இசைப்பாடல், வரைவது போல வருணித்துப் பாடுவது.