படிமை -
(பதிமை) -பதுமை.
இகரம்
உகரமாய்த் திரிவது பெரும்பான்மை.
(எ-டு.)
இழிந்தோர் வழக்கு: பிள்ளை-புள்ளை
பிட்டு - புட்டு
பிண்ணாக்கு - புண்ணாக்கு
பிடு - புடு
இழிவழக்கேனும்
உயர்வழக்கேனும் சொற்றிரிபு விதி ஒன்றே. உயர் வழக்காயின் கொள்ளப்படும்; இழிவழக்காயின்
தள்ளப்படும். இதுவே இவை தம்முள் வேற்றுமை.
(எ-டு)
கொள்ளப்படுவன தள்ளப்படுவன
அ-எ
பரு - பெரு (கத்தரிக்காய்) - கெத்தரிக்காய்
ப-வ
பதி - வதி (பதில்) - வதில்
படிமை என்னும்
சொல்லே வடமொழியில் ப்ரதிமா என்றாகும். வடமொழியில் ப்ரதி என்ற சொற்கு மூலமில்லை. மா
என்பது பண்புப்பெயர் விகுதியன்று. ப்ரதிமா, அணிமா, மகிமா முதலிய மாவீற்றுப் பெயர்களை
யெல்லாம் பகாப்பதங்களென்றே கொள்ளுவர் வடநூலார்.
வடவெழுத்துத் திரிபைக்
கூறுஞ் சூத்திரத்து 'ஆவீறையும்' என்றார் பவணந்தியார். வடமொழி யாகாரம் தமிழில் ஐகாரமாவது
போன்றே, தமிழ் ஐகாரமும் வடமொழியில் ஆகாரமாகும். ஆங்கிலப் பவுன் இந்திய ரூபாவாக
மாறினால் இந்திய ரூபாக்களும் ஆங்கிலப் பவுனாக மாறுமன்றோ? அது போன்றே.
எ-டு: |
தமிழ்
|
வடமொழி |
|
(சாய்-பகுதி) சாயை
|
சாயா |
|
(மால்-பகுதி) மாலை |
மாலா |