2. தமிழில் இயல்
என்னும் சொல் இலக்கணத்தைக் குறிப்பினும், அது அதையே வரையறுத்துச் சுட்டாமையானும், குணம்,
இயற்கை எனப் பலபொருள் படுதலானும், இயற்சொல், இயற்பெயர், இயன்மொழி, இயற்பட மொழிதல்
முதலிய குறியீடுகளில் இலக்கணத்திலும் வேறாக வெவ்வேறு பொருள் தருதலானும், முத்தமிழில்
ஒவ்வொன்றும் இலக்கணம் இலக்கிய மென இருவகைப்படுதலின், அவற்றைக் குறிக்க வேறு சொல்லின்மை
யாலும், இயல் என்பது முத்தமிழில் ஒன்றன் இலக்கணமு மிலக்கியமுமாத லானும் 'இலக்கணம்',
'இலக்கியம்' என்னுங் குறியீடுகள் தமிழுக்கின்றி யமையாது வேண்டப்படுவனவாம்.
"கண்ணு
தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந்
தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில
விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக்
கிடந்ததா எண்ணவும் படுமோ"
என்று தமிழ்ப் புலவர்
தருக்குமாறு 'அத்துணை நிரம்பிய விலக்கணத்தை யுடைய தமிழ்மொழியில், இலக்கண
விலக்கியங்களைக் குறிக்கச் சொல்லில்லையெனின் அது எட்டுணையும் நம்பற்கிடனாகாது.
வடமொழியில்
இலக்கணத்தைக் குறிக்க வியாகரணமென்றோர் தனிச் சொல்லுளது. தென்மொழியில் இலக்கணத்தைத்
தவிர வேறொன்றுமிலது. ஏனை மொழிகட்கெல்லா மில்லாத ஐந்திலக்கணம் நிரம்பிய தனித் தாய்
மொழிக்கு இலக்கண விலக்கியங்களைச் சுட்டச் சொல்லில்லா திருக்குமோ?
3. 'இலக்கணம்',
'இலக்கியம்' என்னும் தென்சொற்களும், லக்ஷணம், லக்ஷ்யம்' என்னும் வட சொற்களும் முறையே
வடிவிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன.
|
|
தமிழ் |
சமஸ்கிருதம் |
|
|
இலக்கணம் |
= |
1.Grammar
|
லக்ஷணம் |
= |
1.
Grammar |
|
|
2. அழகு |
|
|
2. அழகு |
|
|
3.
Definition
|
|
|
3.
Definition |
|
|
4. குணம் |
|
|
4. குணம் |
|
|
5. ஒழுங்கு |
|
|
5. ஒழுங்கு |
இலக்கியம் |
= |
1.
Literature |
லக்ஷ்யம் |
= |
1.
Literature
|
|
|
2. திருஷ்டாந்தம் |
|
|
2. திருஷ்டாந்தம் |
|
|
3. பொருள் |
|
|
3. பொருள் |
லக்ஷ்யம்பண்ணவில்லை -
பொருட்படுத்தவில்லை.
ஆகவே, இச்
சொல்லிணைகள் ஒன்றினின்றொன்றே தோன்றி யிருத்தல் வேண்டும். எச்சொல்லினின்றும்
எச்சொல்லென்பதே கூடா. இதுகாறும் இலக்கண நூல்களிலெல்லாம், 'இலக்கணம்', 'இலக்கியம்'