'இலக்கியம்', 'இலக்கணம'் | 49 |
என
என்னுமிரண்டும் லக்ஷணம்,
லக்ஷ்யம் என்பவற்றின் திரிபென்றே கூறப் பட்டு வந்துள்ளன. நூலாசிரியரும் உரையாசிரியருமான
பிற்றை யிலக்கணி களுட் பெரும்பாலார் வடநூல் வழியராதலானும், அக்காலத்து மொழி
யாராய்ச்சியின்மையானும், அவர் வடநூல்வழி கூறியதெல்லாம் மறுப்பின்றி வழிவழி வழுவப்பட்டு
வந்துள்ளன. வடமொழியினின்றும் ஏனை மொழிகளெல்லாம் ஏராளமாகவும் தாராளமாகவும் கடன் கொள்ளு
மென்றும், அங்ஙனங் கொள்ளாக்கால் வழக்கிற்கும் மொழிபெயர்ப்பிற்கும் போதிய
சொன்னிரம்பாவென்றும், வடமொழியொன்றே பிறமொழியினின்று ஒரு சொல்லும் கடன் கொள்ளாது
தனித்தியங்கும் ஆற்றலுடையதென்றும் ஒரு தவறான கொள்கை, இன்றும் சில வடமொழியாளர்க் கிருந்து
வருகின்றது. தமிழ் வடமொழித்துணை சிறிதுமின்றித் தனித்தியங்கும் ஆற்றலுடைய தென்று
மேனாட்டறிஞர் கூறியிருப்பவும், அதற்கு மாறாக வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கல்
தமிழ்க்குச் சாலாதென்று வடமொழியாளரன்றிச் தமிழ்ப்புலவர் சிலருங்கூடத் தலைவிரித்தாடு
கின்றனர். (வடமொழிவாணர் தம்மைப் புகழக் கருதியோ, அல்லது வடமொழிவாணராகத் தம்மைக்
காட்டக் கருதியோ தெரிகிலம்.) தமிழர் மொழிநூலேயறியா ரென்றும் சுயமான தென்சொற்கும்
வடசொன் மூலங்க கற்பிப்பதே அவர்களுக்குப் பெருமையென்றும் கால்டுவெல் கண்காணியார்
(Bishop
Caldwell) கூறியிருப்பது
இன்றும் மெய்யாயிருப்பது பெரிதும் இரங்கத்தக்க தொன்றாம். தமிழாளர் சிலர் தென்சொற்க
ளின்னின்னவென்று ஐயந்திரிபற வுணர்ந்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தும் உறுதியின்றி,
வடமொழியர் வாய்மருட்டுக் கஞ்சி, "விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டன்ன"
விலவிலக்கின்றமையின் அவர் காட்சி ஊமையன் கண்ட கனாப்போல ஒருசிறிதும் பயன்படாது
ஒழிகின்றது.
'இலக்கணம்',
'இலக்கியம்' என்ற சொற்கட்குத் தென்சொல் வடிவமே இயற்கையாகவும் வடசொல் வடிவம்
செயற்கையாகவும் இருக்கின்றன. ஒரு சொல் ஒரு மொழியினின்றும் மற்றோர் மொழிக்குச்
சென்றதென்பதற்கு அதன் பகுதிப்பொருள் அல்லது மூலப்பொருளே ஆதாரம். உதாரணமாக வெந்ந என்ற
தெலுங்குச் சொற்கு மூலப் பொருளின்மையின் அது வெள்ளை நெய்யெனப் பொருள்படும் வெண்ணெய்
என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபெனத் துணியப்படும். எம்மொழியில் அது பெருவழக்கோ,
எம்மொழியில் அதன் திரிசொற்கள்
(Derivatives)
பெருந்தொகையனவோ, அம்மொழிக்கே அஃது உரித்தெனத் துணியப்படும்.
இலக்கணம், இலக்கியம்
என்னுஞ் சொற்கட்கு வடமொழியிற் பகுதிப் பொருளிலது; தென்மொழியிலோ தெளிவாயுளது.
யாதோவெனிற் கூறுதும்.
1. இலக்கு என்னுஞ்
சொல் முதன்முதல் இலையை உணர்த்தும். ஓரிலக்கு விட்டிருக்கிறது. ஈரிலக்கு விட்டிருக்கிறது என்பது
நெல்லை வழக்கு.
|
|
|