பக்கம் எண் :

'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?59

எம

எம்பு, எவ்வு, எக்கு, எடு, ஏண், ஏணி, ஏணை, ஏத்து, (ஏற்றிச்சொல்), ஏந்து, ஏல், ஏறு, erect, edify, cructate முதலிய சொற்களிற் காண்க. உயர்ச்சிப்பொருளும் எழுச்சிப் பொருளோ டொக்கும்.

        எல் - எல்கு - எலகு - இலகு = விளங்கு.

சொற்களின் மோனைத்திரிபில் இகரம் எகரமாகவும் எகரம் இகரமாகவும் திரிவது இயல்பே.

இலகு

-

இலங்கு

=

விளங்கு.

இலங்கு

=

ஏரி, குளம்.

        தெளிந்த நீர் பளிங்குபோல் விளங்குதலால், ஏரி இலங்கு

எனப்பட்டது போலும்!

"மீன்க ணற்றே அதன்சுனை" என்று கபிலர் பறம்புமலைச் சுனையை      நிலாவிற்கு ஒப்பிட்டுக் கூறியது கவனிக்கத்தக்கது.

        இலங்கு - இலஞ்சு - இலஞ்சி = ஏரி, குளம்.

லஞ்சு (lanj), ரங்கு (rang) என்னும் வடசொற்கட்கு இலங்கு என்னும் தென்சொல்லே மூலமாகும்.

இலங்கு

-

லங்கு

-

ரங்கு

 

(வ.)

லங்கு

-

லஞ்சு

-

ரஞ்சு

-

ரக்த (வ.)

இலங்கு - இலங்கை = ஆற்றிடைக்குறை, தீவு, இராவணன் ஆண்ட நகரம் அல்லது தீவு.

பெருநீரிடைப்பட்ட சிறுநிலம் தனித்து விளங்குவதால் இலங்கை எனப்பட்டது போலும்!

இலங்கு-இலக்கு = விளக்கு, விளக்கம்.

இலக்குதல் = சொலிப்பித்தல், விளங்கவைத்தல், வரைதல், எழுதுதல், குறித்தல். "இரீரகை யிலக்குக" (சைவச. பொது. 274).

வரணந்தீட்டிப் படம் வரைவதும் எழுத்தெழுதுவதும் விளங்கவைத்த லாகும். முதற்காலத்தில் படவெழுத்தே (Linoglyph) வழக்கிலிருந்தது. இன்றும், எழுதுதல் என்னுஞ் சொல், வரணப்படம் வரைதலையும் எழுத் தெழுதுதலையுங் குறித்தல் காண்க. கண்ணுக்கு மறைந்துள்ள பொருள்களை விளக்கு விளக்குதல்போல, எழுத்தும் கண்ணுக்கு மறைந்துள்ள கருத்துகளை விளக்குவதாகும். எழுதுதலும் குறித்தலும் ஒன்றே.

        இலக்கு - இலக்கி = எழுது.

"இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே லிருந்திலக்கித்து"

(சீவக. 180)

இலக்கு அல்லது இலக்கி என்னுந் தென்சொல்லே வடமொழியில் லிக் எனத் திரியும்.  இது மிகமிகக் கவனிக்கத்தக்கது.