|
ல
லிக் = எழுது,
லிகித = எழுதப்பட்டது, லிபி = எழுத்து, லேகக் = எழுத்தாளன், லேக = எழுதப்பட்டது, லேகனீ =
எழுதுகோல் - இவ்வாறு இலக்கு என்னுஞ் சொல் வடமொழியில் பலவாறாகத் திரிசொற்களை உண்டு பண்ணியுள்ளது.
இலக்கு =
குறிப்பொருள், அம்பெய்யுங் குறி, அடையாளம், குறித்த இடம், குறித்த சமையம், குறித்த அல்லது
நாடிய பொருள், பொரக்குறித்த எதிரி, குறித்த அளவு.
இலக்கு வைத்தல்
= குறிவைத்தல், இலக்குப்பார்த்தல் = குறிபார்த்தல், சமையம் பார்த்தல் - இவை இன்றும் தமிழ்
வழக்காம்.
"இலக்க முடம்பிடும்பைக்
கென்று கலக்கத்தைக் கையாறாக்
கொள்ளாதாம் மேல்" (குறள். 627)
என்றார் திருவள்ளுவர்.
ஒரு குறித்த
இடத்தை இன்றும் இலக்கு என்பர் நெல்லை நாட்டார். இலக்கு என்னும் சொல்லே, இலத்தீனில்
locus
என்று திரிந்து, ஆங்கிலத்தில்,
local, locate, locative
முதலிய சொற்களைப்
பிறப்பிக்கும். குறித்த இடம் என்னும் சிறப்புப் பொருளைத் தரும் தமிழ்ச்சொல், இலத்தீனில்
தன் சிறப்புப்பொருளை யிழந்து, இடம் என்னும் பொதுப்பொருளையே தருதல் காண்க. இங்ஙனமே, ஒப்போன்
கேட்டலைக் குறிக்கும் தா என்னும் தமிழ்ச்சொல், இலத்தீனில் கேட்டலை மட்டும் குறிக்கும்
do
என்னும் திசைச்சொல்லாகத் திரிந்துள்ளது.
எய்வதற்குக்
கொண்ட குறியன்றி, எடுத்துக்காட்டுவதற்குக் கொண்ட குறியும், இலக்கு என்றே சொல்லப்படும்.
"உடன்பிறப்
பன்பிற்கு இலக்கானவர் இளங்கோவடிகள்" என்னும் சொற்றொடரில், இலக்கானவர் என்பது எடுத்துக்காட்டானவர்
என்று பொருள்படும். இப் பொருளில் இலக்கு என்னும் சொல் இலக்கியம் என்னும் வடிவம் எய்தும்.
ஒரு கருத்தை அல்லது கூற்றை இலங்க (விளங்க) வைக்கும் பொருள் இலக்கு எனப்பட்டது. ஆங்கிலத்திலுள்ள
illustrate
என்னும் சொல்லும் இப்
பொருளதே. L.
illustro = to light up, to illuminate, il = in, lustro = to make light.
இலக்கு - இலக்கம்
= ஒளி, குறிப்பொருள், எண்குறி, எண்ணிடம், எண், பேரெண்ணாகிய நூறாயிரம்.
இலக்கமிடுதல்
= கணக்கிடுதல்.
முதலாவது நூறாயிரத்திற்கும்
நூறு நூறாயிரத்திற்கும் தமிழில் தனிச்சொல் இல்லை. பின்னர், பேரிலக்கமாகிய நூறாயிரம் இலக்க
மென்றும், கடைசி யிலக்கமாகிய நூறு நூறாயிரம் கோடி யென்றும் சொல்லப்பட்டன.
|
|
|