இலக
இலக்கம் -
லக்ஷ (வ.) - லாக் (உ.)-
lac (E.)
கோடி -
கோட்டி (வ.) - குடோடு (உ.) --
crore (E.)
இலக்கு -
இலக்கர், இலக்காரம் = ஆடை.
ஆடை ஆள்களை
விளங்கச்செய்வதால் இலக்கர் எனப்பட்டது.
"ஆடை
யில்லாதவன் அரைமனிதன்"
இலக்கு -
இலக்கை = ஆடை, சம்பளம்.
சம்பளம் ஒரு
குறியெதிர்ப்பாதலால் இலக்கை யெனப் பெயர் பெற்றது.
இலங்கு - இலஞ்சு -
இலஞ்சினை - இலாஞ்சினை = குறி, அடையாளம், முத்திரை. இலஞ்சினை - இலச்சினை = குறி,
முத்திரை.
இலாஞ்சினை -
லாஞ்சன (வ.).
எழுத்தைக்
குறிக்கும் இலக்கு என்னும் சொல், ஆகுபெயராய்ச் சொல்லையும் மொழியையும் உணர்த்தி, 'அணம்'
விகுதி பெற்று மொழியின் நூற்றொகுதியையுங் குறிக்கும்.
Logos
என்னும் கிரேக்கச்சொல் சொல்லையும், கட்டுரையையும் நூலையுங் குறித்தல் காண்க. அச்
சொல்லும் இலக்கம் என்னும் தென் சொல்லுக்கு இனமானதே.
Gk. gramma = a letter; gramma - grammar (E.)
L. litera = a letter; litera - literature
(E.)
இங்ஙனம்,
ஆங்கிலத்திலுள்ள இலக்கண விலக்கியப் பெயர்களும், எழுத்தைக் குறிக்குஞ் சொல்லினின்றே
பிறந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இலக்கணம்
என்னும் தென்சொல்லினின்றே, லக்ஷணா என்னும் வடசொல்லும் திரிக்கப்பட்டு, பின்பு தமிழில்
இலக்கணை என வழங்குகின்றது.
லக்ஷணா =
குறிப்புப்பொருள்.
விட்ட
விலக்கணை, விடாத விலக்கணை, விட்டும் விடாத விலக்கணை ஆகிய மூன்றும் குறிப்பாய்ப்
பொருளுணர்த்துவனவே. இலக்கணைக் கினமான ஆகுபெயர் குறிப்பாய்ப் பொருளுணர்த்து வனவற்றோடு
(பவணந்தியாரால்) சேர்க்கப் பெற்றிருத்தல் காண்க.
தமிழில்,
இலக்கணம் இலக்கியம் என்னும் சொற்கள், வேர்ப் பொருளைத் தாங்கி நின்று, எழுத்தையுங்
குறித்து, Grammar,
literature என்னும்
பொருளைத் தருகின்றன. வடமொழியிலோ, அவற்றுக்கு நேரான லக்ஷ்ணம் லக்ஷ்யம் என்னும் சொற்கள்
வேர்ச்சொல் அற்று, எழுத்தைக் குறிக்கும்போது லிக் என வேறொரு வடிவம் பூண்டு, இலக்கண
விலக்கியத்தைக் குறிக்காது குணங்குறிப் பொருளையே தாங்கி நிற்கின்றன. இவ் வேறுபாட்டைக்
கண்டுகொள்க.
|