பக்கம் எண் :

திருவென்னும் சொல் தென்சொல்லே65

New Page 1
   "நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே  
      கல்லார்கட் பட்ட திரு",

(குறள். 408)

   
   "வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக  
      நினைப்பானை நீங்குந் திரு",

(குறள். 519)

   
   "இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்  
      சீறிற் சிறுகுந் திரு",

(குறள். 568)

   
   "முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை  
      யின்மை புகுத்தி விடும்",

(குறள். 616)

   
   "இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்  
      திருநீக்கப் பட்டார் தொடர்பு",

(குறள். 920)

   
   "கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்  
     திருநுதற் கில்லை யிடம்"

(குறள். 1123)

எனச் செல்வம், (செல்வத்திற்குத் தலைவியான) திருமகள், அழகு என்னும் முப்பொருள்களில் வழங்கியுள்ளது; பிற பொருள்களில் பிற நூல்களில் வழங்கியுள்ளது.

    இனி, இருவகை வழக்கிலும், தேவியல் மகவியல் என்னும் இரு வகைச் சார்பில், திரு என்னும் சொல் தூய்மை, செல்வம், அழகு, மங்கலம், கண்ணியம் என்னும் பொருள்களுள் ஒன்றில் அடை மொழியாகத் தொன்றுதொட்டு வழங்கி வருவதைப் பின்வருங் காட்டுகளா லறிக.

1. தேவியல்

   (1) தெய்வம்: திருமகன், திருமகள், திருமால், திருமடந்தை.
   
   நூல்: திருக்கடைக்காப்பு, திருக்குறள், திருக்குறுந்தாண்டகம்,
  திருக்கோவை, திருநெடுந்தாண்டகம், திருப்பதிகம்,
  திருப்பல்லாண்டு, திருப்பாட்டு, திருப்பாவை, திருப்புகழ்,
  திருமந்திரம், திருமுறை, திருமொழி, திருவகுப்பு,
  திருவாசகம், திருவாய்மொழி, திருவெழுத்து.
   ஊண்: திருக்கன்னலமுது, திருப்படிமாற்று, திருமதுரம், திருமாலை
  வடை, திருவமுது.
   
   அணி: திருச்சுண்ணம், திருநீறு, திருப்பட்டம், திருப்பாவாடை,
  திருமண், திருவாத்தி.
   
   பொருள்: திருச்சின்னம், திருமரம், திருமலர், திருமுட்டு,
  திருமுளைப்பாலிகை, திருவலகு, திருவாசிகை,
  திருவாடுதண்டு, திருவிளக்கு.
   
   இடம்: திருச்செந்தூர், திருநகர், திருநாடு, திருநெல்வேலி, திருப்பதி,
  திருமலை. திருவரங்கம், திருவிதாங்கூர், திருவேங்கடம்,
  திருக்கண், திருக்களிற்றுப்படி, திருக்கற்றளி, திருச்சுற்று,