த
|
திருப்பாற்கடல், திருமடம்,
திருமாளிகை, திருமுற்றம், |
|
திருமுன், திருவுண்ணாழிகை,
திருவோலக்கம் |
காலம்: |
திருநாள், திருவாதிரை, திருவோணம் |
|
|
சினை: |
திருக்கண் (சாத்துதல்),
திருச்செவி, திருமுடி, திருமேனி, |
|
திருவடி, திருவாய்(மலர்தல்),
திருவுள்ளம் |
|
|
குணம்: |
திருக்குறிப்பு, திருவருள்,
திருக்கோலம். |
|
|
தொழில்: |
திருக்கலியாணம்,
திருக்கார்த்திகை, திருவிழா, திருவூறல், |
|
திருக்காப்பு, திருக்கூத்து,
திருத்தொண்டு, திருப்பணி |
|
திருப்பள்ளி, திருமுழக்கு,
திருவிளையாடல் |
|
|
(2) அடியார்: |
திருக்கூட்டம், திருச்சுற்று,
திருத்தக்கதேவர், |
|
திருத்தொண்டர், திருமூலர்,
திருவடிமார், |
|
திருவள்ளுவர், திருவோடு. |
(2) அடியார்:
திருக்கூட்டம், திருச்சுற்று, திருத்தக்கதேவர், திருத்தொண்டர், திருமூலர், திருவடிமார்,
திருவள்ளுவர், திருவோடு.
2. மகவியல்
(1)
வேத்தியல்: திருமறு, திருமுகம், திருமுத்து, திருமூப்பு, திருமந்திரம், திருவாணை,
திருவாய்க்கேள்வி, திருவோலை.
(2)
பொதுவியல்: திருநிலைக்கால், திருநிலைமகளிர், திருப்பூட்டு, திருமகன், திருமகள்,
திருமங்கலியம், திருமணம், திருவாங்குதல், திருவில், திருவினை, திருவுழுத்து(அணி).
இவற்றுள்,
திருநெல்வேலி, திருவரங்கம் முதலிய இடப்பெயர்கள் தொன்றுதொட்டு உலகவழக்கில் திருவென்னும்
அடைபெற்றே வழங்கு வதையும், ஸ்ரீரங்கம் என்னும் வடிவம் இருவகை வழக்கிலும் பிற்காலத்த தாதலையும்
நோக்குக. இதனால், திருவில்லிபுத்தூர் என்பதே ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதன் பண்டை வடிவமும் என
அறிக.
திருமகன்
என்னும் பெயர் திருமான் என மருவிச் செல்வம் அல்லது பெருமை குறிக்கும் அடைமொழியாகும்.
பெருமகன் என்னும் பெயர் பெருமான் என மருவுதல் காண்க. திரு என்பதை ஸ்ரீ என்று திரித்ததனால்,
திருமான் என்னும் அடையை ஸ்ரீமான் என்று திரிப்பர் வடமொழியாளர். அதனுள், மான் என்னும் ஈற்றை
'மத்' என மற்றும் திரித்து, 'ஸ்ரீமத்', 'ஸ்ரீமதி' என்பவற்றை முறையே ஆண்பால் பெண்பா
லடைமொழிகளாக முழு வடவடிவில் வழங்குவர். திருமகன், திருமான் என்னும் ஆண்பாற் சொற்கட்குத்
திருமகள், திருமாட்டி என்பவை தமிழில் முறையே பெண்பாலாகும். பெருமான் என்னும் ஆண்பாற்
சொற்குப் பெருமாட்டி என்பது பெண்பாலாதல் காண்க. ஸ்ரீ என்னும் வடசொல் வடிவைத் தமிழில் சீ
எனச் சிதைத்துத் திருமான் திருமாட்டி என்பவற்றைச் சீமான் சீமாட்டியென எழுதுவது, கோழிக்கோடு
என்பதை Calicut
என்னும் ஆங்கிலவடிவு வாயிலாய்க் கள்ளிக்கோட்டை யென்றெழுதுவதும், காளிக்கோட்டம் என்பதை
Calcutta
என்னும்
|
|
|