| 'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது? | 79 |
|
ஆங
ஆங்கிலத்தில்
'column'
என்னும் சொல் தூணையும் பிரிவையும் சட்டத்தையும் குறிக்கும். சட்டமும் கால், தூண், கால்வாய்
இவற்றுள் ஒன்றைப் போன்றே இருக்கும். கால் என்னும் சொல் காலத்தைக் குறிக்கும்போது
தமிழிலும் 'அம்' ஈறு பெறும். தூண் என்பது தூணம் என்றும் வழங்கும். ஆகையால் 'கால்'
'column'
என்னுஞ் சொற்கட்கு ஓர் இயைபுண்டோ என்று ஐயுறக்கிடக்கின்றது. ஆங்கில அகராதிகள்
'column'
என்னும் சொற்கு
celsus(high),
collis (a hill)
முதலிய மூலங்களைக் காட்டு கின்றன. அவை அவ்வளவு பொருத்தமுடையனவல்ல. மொழி நூற்கலை இன்னும்
சரியாய் வளர்க்கப்படாமையின், மேனாட்டார் தமிழின் அருமையை அறிந்திலர் என்றே
கூறல்வேண்டும்.
இங்ஙனமிருப்பவும்,
சிலர், தமிழுக்கு நீண்ட காலத்தைக் குறிக்கச் சொல்லில்லை யென்றும், புதன், சனி, ருது
என்னும் வடசொற்குத் தென் சொல்லில்லை யென்றும், 27 நட்சத்திரங்களுக்கும், 12
மாதங்கட்கும் தமிழிற் பெயரில்லை யென்றும், வடமொழித் துணையின்றித் தமிழ் தனித்தியங்கா
தென்றும் தமிழர்க்குத் தனி நாகரிகமில்லை யென்றும், பலவாறு பிதற்றாநிற்பர். இனி, சிலர்
முழுப்பூசனியைச் சோற்றில் மறைப்பதுபோல், தமிழே வடமொழியினின்று வந்ததுதான் என்று
வரம்பிறந்து மனப்பால் குடிப்பர். தமிழ் வடமொழிக்கு மிக முந்திய தென்பதும், வடமொழித்
தோற்றத்திற்கு அல்லது ஆரியர் வருகைக்கு முன்னரே, அக்காலத்து மக்கட்குத் தோன்றிய கருத்துகளை
யெல்லாம் தெரிவிக்கும் சொற்களைத் தன்பாற் கொண்டுள்ள தென்பதும் அவர் அறியார் போலும்!
ஆரியர் இந்
நாட்டிற்கு வருமுன்னரே தமிழர் பல கலைகளிலும் தேர்ந்திருந்ததினாலும், தமிழர்க்கு வானநூலும்
(Astronomy)
தெரிந் திருந்தமை பண்டை நூல்களால் அறியப்படுவதாலும், நொடி முதல் ஊழியீறான சிறிய பெரிய
கால அளவுகட்கெல்லாம் தமிழிற் சொல்லுண்மை யாலும், சொல்வளம் தமிழின் தனிப்
பண்பாதலாலும், கால் என்பது ஒரு வினையெச்ச விகுதியாகவும், காலம் என்பது வினையின் காலத்தைக்
குறிக்குஞ் சொல்லாகவும் தொன்றுதொட்டுத் தமிழிலக்கணத்தில் வழங்கிவருவதாலும், கால், காலை,
காலம் என்னும் மூன்று வடிவங்களும் குறுங்காலத்தையும் நெடுங்காலத்தையும் குறிக்கத் தமிழில்
இருவகை வழக்கிலும் பெருவழக்காகத் தொன்றுதொட்டே வழங்கிவருவதாலும், காலம் என்னும்
சொல்லின் மூலப்பொருள் தமிழிலேயே தோன்றுவதாலும், மேனாட்டாரிய மொழிகளில் காலம் என்னும்
சொல் காலப்பொருளில் வழங்காமையானும், நச்சினார்க்கினியர் கூறியபடி காலம் என்னுஞ் சொல்
செந்தமிழ்ச் சொல்லே யென்று எட்டுணையும் ஐயமறத் தெளியப்படும்.
தமிழிற் சில
கருத்துகளை யுணர்த்தற்கு இதுபோது சொல்லில்லை யென்பது உண்மையே. ஆயினும் அதற்குத் தகுந்த
காரணங்கள் உள.
|
|
|