இந் நாற்பத்து
நான்கு பொருள்களும், கால்போலக் கீழிருப்பது, தாங்குவது, நீண்டிருப்பது, பிரிந்திருப்பது,
காற்பங்காயிருப்பது, நிலத்தில் ஊன்றுவது முதலிய கருத்துப்பற்றியனவாயே இருத்தல் காண்க.
கால் உடம்பில்
ஓர் இடமாயிருத்தலால், அதன் பெயர் இடத்தையும் குறிப்பதாயிற்று. பந்தர்க்காலுக்குப்
பெரும்பாலும் மூங்கிலை நடுவதாலும், மூங்கில் வளர்வது காட்டிலாதலாலும், மூங்கிற்குழாயை அறுத்து
முகத்தற் கருவியாகக் கொள்வராதலாலும், கால் என்னும் பெயர் மூங்கில், வனம், மரக்கால்
என்னும் பொருள்களையும் தரும்.
பொழுது முதலிய
மூன்று பொருள்களும் காலத்தையும், காலன் முதலிய மூன்று பெயர்களும் மழைக்காலையும் மூலமாகக்
கொண்டன வாகும்.