ஆங
ஆங்கிலத்திலும், சிறுவனைக்
குறிக்கும் சில சொற்கள் மாணவனை யுங் குறிக்கின்றன.
Pupil.n.
(L. pupillus, pupilla, dim.s. of pupas, a boy; pupa, a
girl.) 1. A young person of either sex under the care of an instructor or tutor;
a scholar; a disciple.
-The Imperial
Dictionary, p. 573.
Pedagogue.
n. (Gk. paidagogus-pais, paidos, a child and ago, to lead')
A teacher of children; one whose occupation is to instruct young children; a
school master now used generally by way of contempt
Ibid. p. 396.
மாணவன் என்னும் சொல்லின் அடி
(Stem)
மண் என்பதாகும். இவ் வடியின் வேர்
(Root)
முள் என்பது. இவ் வேரின் இயல்புவடிவம் முல்.
முல் என்பது,
சிறுமையை அல்லது இளமையை உணர்த்தும் வேர்ச் சொற்களுள் ஒன்று.
முல்-(முன்)-முனி
|
= |
(கன்று), யானைக்கன்று |
|
"முனியுடைக் கவளம்
போல"(நற்.360). |
முல் - முள் - முளை
|
= |
1. இளமை |
|
"முளையமை திங்கள்"
(கம்பரா. கும்பகர்ணன் வரைப் படலம், 16.) |
|
2. மரக்கன்று. "அதன்றாள்
வழியே முளையோங்குபு" (சீவக. 223). |
|
3. சிறுகுழந்தை. |
முளை - முளையான்
|
= |
சிறுகுழந்தை. |
முள் - முளி - முறி
|
= |
தளிர். "முறிமேனி" (குறள்.
1113) |
முறிதல்
|
= |
துளிர்த்தல். "முறிந்த
கோல" (சீவக. 2358) |
முறி - மறி
|
= |
சில விலங்கின் குட்டி |
"யாடும் குதிரையும்
நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே."
(தொல். 1511)
முள் - முட்டு =
சிறு பொருள். முட்டுக்காய் = சிறுகாய்.
முட்டுக்
குரும்பை=சிறு குரும்பை. முட்டு - முட்டை=சிறு கரண்டி.
முட்டை =
மொட்டை. மொட்டைப் பயல் = சிறு பயல்.
முள் - முடு -
முடுக்கு = சிறு சந்து.
மொழிவளர்ச்சியில்
சொற்கள் அடையும் பல்வகைத் திரிபுகளுள், இனத்திரிபு என்பது ஒன்று. அதில் உயிரினத் திரிபு
என்பது ஒரு பிரிவு.
|