பக்கம் எண் :

'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?்83

ஓருயிர் மற்றோ ருயிராகத்திரிவது உயிரினத் திரிபாம். எந்த வுயிரும் வேறெந்த உயிராகவும் திரியலாம். ஆயினும், பெரும்பான்மையாக இயல்கின்ற சில முறைப்பட்ட உயிரினத் திரிபுகள் உள்ளன. அவற்றுள் உ-அ என்பது ஒன்று.

         எ-டு:

குடும்பு - கடும்பு துணை - தனை
குடம் - கடம் முடங்கு - மடங்கு
குட்டை - கட்டை முறி - மறி (=வளை)
துளிர் - தளிர்      

முள் - மள்

    மள்-மள்ளன் = இளைஞன்.

    "பொருவிறல் மள்ள" (திருமுருகு. 262)

மள் - மழ   

 

"ரகார ழகாரம் குற்றொற் றாகா" (தொல், 49)
  ஆதலால், மழ் என்னும் வடிவம் தோன்றாது,
  மழ =      1. இளமை.
 

"மழவும் குழவும் இளமைப் பொருள" (தொல், 796)

    2. குழந்தை.  
    "அழுமழப் போலும்" (திருக்கோ. 147)  
  மழ - மழவு = இளமை, குழந்தை.
  மழபுலவர் = பள்ளியிற் படிக்கும் சிறார்.
         "மையாட லாடன் மழபுலவர் மாறெழுந்து" (பரிபா. 11 : 88)
  மழமழப்பு = மென்மை.
  மழலை = இளமை, மென்மொழி, குழந்தைமொழி, புதுமை
  மழலைத்தேன் = புதுத்தேன்.
  மழவன் = 1. இளைஞன் (பிங்.).
      "மழவர்த மனையன மணவொலி" (கம்பரா. நாட்டுப் படலம், 50)
      2. வீரன் "மழவர் பெரும" (புறம். 90)
  மழறுதல் = மென்மையாதல்.
  "மழறுதேன் மொழியார்கள்" (திவ். திருவாய்மொழி, 6 : 2 : 5.)

மழ-மாழை= இளமை.

    "மாழை மடமான் பிணையியல்" (கலித். 131)