ஒரு மொழியின் இலக்கியத்தை, (அம் மொழியைத்
தாய் மொழி யாகக் கொள்ளாத) பிறமொழியாளரும்
கற்று முழுத்தேர்ச்சி பெறலாம். ஆயின், அம்
மொழியில் முழுப்புலமை பெறுவது குதிரைக்
கொம்பு.
தமிழ் குமரிநாட்டில் தோன்றிய, மிகப்
பழைமையான, வரலாற்றிற் கெட்டாத உலக முதன்மொழியாதலின்,
அதை ஆழ்ந்து ஆராய்ந்து மூலங் காண்பது, தமிழ்ப்
பெரும்புலவர்க்கும் அரிதாகும். தமிழையும் திராவிட
மொழிகளையும் இருபத்தொன்றென்று கணக்கிட்டு,
ஒப்பியல் அகரமுதலி தொகுத்துள்ள பேரா. பரோவும்,
பேரா. எமனோவும், ஓரளவு சொற்களைத் தொகுத்தவரேயன்றி
அவற்றின் மூலத்தை அல்லது வேர்ப்பொருளைக்
கண்டவரல்லர். ஆதலால், அவர் திரவிட அகரமுதலி
ஒப்பியல் அகர முதலியேயன்றிச் சொற்பிறப்பியல்
அகர முதலியன்று. மேலும், அது சென்னைப் பல்கலைக்கழகத்
தமிழ் அகர முதலியை (Tamil
Lexicon)
அடிப்படையாகக் கொண்டதனால் வழுவுற்றது
மாகும்.
உலகில் முதன்முதல் தோன்றிய தமிழ் வண்ணமாலை
(குறுங் கணக்கு அல்லது நெடுங்கணக்கு) தனியொலியன்களைக்
கொண்டதே யன்றி, ஆங்கில வண்ணமாலைபோல்
ஓரொலிக்குப் பலவரியும் ஒரு வரிக்குப் பல
வொலியும் கொண்ட குழறுபடைத் தொகுதியன்று. சென்ற
நூற்றாண்டிறுதியில் ஒலியன்களைக் கண்ட மேலை
மொழிநூலார், தமிழ ருக்கு ஒலியன்களைக் கற்பிக்க
வந்தது, கொற்றெருவில் ஊசி விற்பதே.
மேலை மொழிநூலாரின் நூல்களைப் படித்தமட்டில்,
ஒருவர் தம்மை மொழியாராய்ச்சியாளராகக்
கருதிக்கொள்வது அறியாமை யின்பாற்பட்டதே.
படிப்பு வேறு; ஆராய்ச்சி வேறு. படிப்பிற்கும்
ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை, கடற்கரையில்
முத்துச்சிப்பிகளைக் காண்பதற்கும் கடலுள்
மூழ்கி அவற்றை எடுத்துக்கொண்டு வருவதற்கும் உள்ள
வேற்றுமையாகும். பல்லாண்டு பொறுமையுடன் பாடுபட்டுச்
செய்ய வேண்டிய மொழியாராய்ச்சியை, ஒன்பான்
கிழமை மொழிநூற் பள்ளியிற் பெற்றுவிட
முடியாது.
இனம், மதம், மொழி, நாடு ஆகிய நான்கும் எத்துணைப்
பேரறிஞர்க்கும் வெறி அல்லது பெரும் பற்று ஊட்டக்கூடிய
நெருங்கிய தொடர்புகளாகும்.
தமிழ்நாட்டுப் பிராமணர், தமிழர் துணைகொண்டு
தமிழால் வாழ்ந்தும், தமிழரைத் தமக்கும் தமிழைச்
சமற்கிருதத்திற்கும் என்றும் அடிப்படுத்தியே
வைத்திருக்க வேண்டுமென்று திட்டமிட்டு வேலை
செய்து வருகின்றனர். இந் நன்றிக்கேடு இனப்போரைத்தான்
வளர்க்கும். கிரேக்கத்திற்கு நெருங்கியதாயிருந்து
வழக்கற்றுப்போன கீழையாரிய மொழியும், வடநாட்டுப்
பண்டை வட்டார மொழிகளாகிய பைசாசி, சூரசேனி,
மாகதி என்னும் முப்பிராகிருதங்களும் கலந்ததே
வேதமொழி யாகும். அவ் |