தமிழ்நாட்டிற்கே
யுரிய தனிச்சிறப்பாகும். அகக்கரண வலிமை யிழந்த
அடிமையர்க்குத் தமிழாராய்ச்சி செய்யுந் தகுதியில்லை.
இந் நிலையில், குசராத்தியரான தமிழ்நாடு
ஆளுநர் பெருந்தகை திரு. கே.கே.சா
அவர்கள் தம் பல்வேறு பணிகட்கிடையே தமிழைப்
பல்லாண்டு பற்றொடு கற்றாய்ந்து, தமிழ் ஆரியத்திற்கு
நெருங்கிய தென்றும், சமற்கிருதம் தமிழை வளம்படுத்தியிருப்பினும்
தமிழினின்றே தோன்றிய தென்றும், நடுநிலையாகவும்
துணிந்தும் கூறியும் எழுதியும் வருவது,
"உடன்பிறந்தார்
சுற்றத்தா ரென்றிருக்க வேண்டாம்
உடன்பிறந்தே
கொல்லும் "வியாதி"-உடன்பிறவா
மாமலையி லுள்ள
மருந்தே பிணிதீர்க்கும்
ஆமருந்து
போல்வாரு முண்டு"
என்னும்
ஒளவையார் ஒருவர் கூற்றையே நினைவுறுத்துகின்றது.
இது வரை எந்த ஆளுநரும் இத்தகைய
மொழியாராய்ச்சியோ தமிழ்ப் பணியோ செய்ததில்லை.
(வெண்பாவில் "வியாதி" என்பது "பிணிகள்" என்றிருப்பதே
பொருத்தமாகும்.)
குச்சரம் (Gujarat)
ஒரு
காலத்தில் ஐந்திரவிட (பஞ்ச திராவிட) நாடுகளில்
ஒன்றாகக் கொள்ளப்பட்டதேனும், இற்றை நிலையில்
அஃது ஓர் ஆரிய நாடாகவே கருதப்படுகின்றது. ஆதலால்,
ஆளுநர் அவர்கள் தமிழிற் பற்று வைக்க எவ்வகை
இயற்கைத் தொடர்புமில்லை.
ஆகவே, உண்மைத் தமிழர் அனைவரும், உடனே தனிப்பட்ட
முறையிலோ, கழக மன்றச் சார்பிலோ, ஆளுநர்க்குப்
பாராட்டு விடுப்ப துடன், கலைஞர் முதல்வர் அவர்கட்கு,
தமிழ் சமற்கிருத ஏனையிந்திய மொழிகள் ஆராய்ச்சி
முடியும்வரை, தமிழ்நாட்டிலேயே ஆளுநர் அவர்
களை இருத்திக்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள்
விடுத்தலும் வேண்டும்.
சிறப்பாக, உலகத் தமிழ்க்கழகக் கிளைகளெல்லாம்
இதை உடனே நிறைவேற்றுதல் வேண்டும்.
இது தமிழுக்கு உயிர்நாடியான செய்தி என்பதை
உணர்ந்துகொள்க. தமிழ்நாட்டின் உச்சநிலை
அதிகாரியான ஓர் அயல்நாட்டார் இங்ஙனம் தமிழைக்
காக்க வந்தது, இறைவன் பேரருள் என்றே துணிந்து
வழுத்துக.
- செந்தமிழ்ச் செல்வி" அகுதோவார் 1975 |