கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கும் 9ஆம் நூற்றாண்டிற்கும்
இடையில், தேவாரமூவரும் மாணிக்கவாசகரும்
பன்னீராழ்வாரும்
திருப் பாடல்களால் தமிழின் தெய்வத் தன்மையை
நிலைநாட்டினர்.
19ஆம் நூற்றாண்டில், ஆறுமுக
நாவலர்
தில்லையிலும் யாழ்ப் பாணத்திலும் கல்லூரிகள்
நிறுவியும்; சென்னையில் ஓர் அச்சகம் அமைத்துப்
பரிமேலழகருரை, திருக்கோவையுரை, நன்னூற் காண்டிகை,
தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்
முதலிய சிறந்த நூல்களை அச்சிட்டும்; பெரியபுராணம்,
திருவிளையாடற் புராணம் முதலிய சிறந்த தொன்மங்கட்கு உரைநடை
வரைந்தும்; சிறுவர்க்கேற்ற பாடப் பொத்தகங்கள்
இயற்றியும், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழுக்கும்
சிவநெறிக்கும் சிறந்த தொண்டாற்றினார்.
கால்டுவெல்
மேற்காணியார் தம் திரவிட ஒப்பியல் இலக்கணத்தி
னாலும்,போப்பையர்
திருக்குறள் நாலடியார் திருவாசக ஆங்கில
மொழிபெயர்ப்பினாலும், தமிழின் பெருமையை
ஒல்லும் வகையில் உலகறியச் செய்தனர்.
இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பாலவநத்தம்
வேள் பாண்டித்
துரைத் தேவர்,
"மதுரைத் தமிழ்ச்சங்கம்" நிறுவியும், அரிய
கட்டுரை களைக் கொண்ட "செந்தமிழ்" என்னும்
மாதிகை நடாத்தியும், முந்நிலைப் பண்டிதத் தேர்வுகட்குரிய
பாடச்சாலை யேற்படுத்தியும், ஓர் அச்சகம்
அமைத்து எழுபது அரிய நூல்களை வெளியிட்டு விற்பனை
செய்தும், நல்ல தமிழ்த்தொண்டு செய்தார்.
அச் சங்கத்தில் தலைமையாயிருந்த பிராமணப்
புலவரின் வடமொழிப் பற்றினால் நேர்ந்த
சில தீங்குகள்,பாண்டித்துரைத் தேவரையும்
அவர் பின்னோரையும் கடுகளவுஞ் சாரா.
1912ஆம் ஆண்டில், தஞ்சைத் தமிழவேள்
உமாமகேசுவரம் பிள்ளை, "கரந்தைத் தமிழ்ச்சங்கம்" தோற்றுவித்தும்,
தமிழ்ப்பொழில் என்னும் மாதிகை நடாத்தியும், தமிழ்ப் புலவர் கல்லூரி
நிறுவியும், சில சிறந்த ஆராய்ச்சி நூல்களை
வெளியிட்டும், 1925 முதல்தமிழ்ப் பொழில்
என்னும் திங்களிதழைத் தொடர்ந்து வெளியிட்டும்
இயன்ற வரை தமிழ்த் தூய்மை போற்றியும், இந்தித்
திணிப்பை வன்மையா யெதிர்த்தும், சிறந்த
தமிழ்ப்பணியாற்றினார். அவர் தொடங்கிய
நற் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.
சி.வை. தாமோதரம் பிள்ளையும் பவானந்தம்
பிள்ளையும் சிற்சில அரும்பெரு நூல்களை வெளியிட்டனர்.
பெரும் பேராசிரியர் தென்கலைச் செல்வர் பண்டாரகர்
உ.வே. சாமிநாதையர் நூற்பதிப்புத்
துறையிற் பெரும்பெயர் பெற்ற மறக்கொணாத்
தனிப்பெரும் புலவராவர். பத்துப்பாட்டும் எட்டுத்
தொகையுள் ஐந்தும், பெருவனப்பு (பெருங்காவியம்)
நான்கும், பனுவல் கள் (பிரபந்தங்கள்), தொன்மங்கள்
(புராணங்கள்), இலக்கண நூல்கள், கட்டுரைத் தொகுதிகள், |