பிள்ளையின்
பணித்திறமையை விளக்குவதுமான நிறுவனம் "மறை
மலையடிகள் நூல்நிலையம்"
ஆகும். இது 35,000 நூல்களே கொண்ட தாயினும், பிற
நூலகங்களில் இல்லாதனவும் மிகப் பழையனவுமான
பல அரிய வெளியீடுகளைக் கொண்டுள்ளது. இவற்றைத்
தொகுக்கத் திரு. வ. சுப்பையாப் பிள்ளை 40 ஆண்டு
பட்டபாடு கொஞ்ச நஞ்ச மன்று. சேய்மையிலும்
அண்மையிலுமுள்ள உலகத்தின் பல பாகங்களிலு
மிருந்து, ஆராய்ச்சியாளர் இங்கு வந்து இதனாற்
பெரும் பயன் பெற்றுச் செல்கின்றனர்.
தமிழ்ப் பற்று
வணிக மதிநுட்பம், சூழ்வுத்திறன் முதலியவற்றொடு
திரு. வ. சுப்பையாப் பிள்ளைக்கு உள்ள அளவிறந்த
தமிழ்ப்பற்று, அவரைத் தமிழ் வெளியீட்டாளருள்
தன்னந்தனியராகச் சிறப்பித்துக் காட்டும்.
அது அவரது சிக்கனத்தையும் மேற்கொள்ளும்.
அதனாலேயே, விரைந் தும் மிகுதியாகவும் விலையாகாத
என் பல்வேறு சொல்லாராய்ச்சி,
மொழியாராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளார்.
அவற்றை வெளியிடும் வேறு வெளியீட்டாளர்
ஒருவருமில்லை. ஆங்கில நூல்களையும் வெளி
யிடுவதும், கையெழுத்துப் படிகளையும் நல்விலை
கொடுத்து வாங்கு வதும், ஓய்வு பெற்ற வறுமைப்
புலவரை வேலைக் கமர்த்துவதும், இந்தித் திணிப்பை
எதிர்ப்பதும், அவரது தமிழ்ப் பற்றையே சிறப்பக்
காட்டும்.
எண்வகை வனப்பும் பல்துறை நூலும் உள்ளிட்ட குமரிநாட்டு
எழுநிலச் செய்யுளிலக்கியம் அனைத்தும் இருவகையில் அழியுண்ட பின்,
எஞ்சியிருந்த இயற்றமிழிலக்கணத்தின் சார்பு
நூலாக வேறெம்
மொழியிலும் இல்லாத பொருளிலக்கணங் கூறும்
தொல்காப்பியமும்,
கடவுளை முதன் முதலாகக் கண்ட தமிழர் இம்மைக்குரிய
அறம்பொரு ளின்பத்தொடு மறுமைக்குரிய
வீடுபேறும் சேர்த்து வகுத்த நாற் பொருளை, நவில்தொறும்
நயம் தோன்ற முப்பாலில் விளக்கும் திருக்குறளும்,
இன்றும் தமிழை ஈடிணையற்ற மொழியாக ஏனையவற்றி
னின்று பிரித்தே காட்டுகின்றன.
ஆயினும், வாள்போற் பகைவரும் கேள்போற்
பகைவரும், தமிழை ஒரு சிறப்புமற்ற பன்மொழிக்
கலவையான புன்சிறு புதுமொழி யாகக் காட்டி
வருகின்றனர். இதைக் கடந்த அறுபான் ஆண்டாகச்
சை. சி. நூ. ப. கழகம் பல்வகையில் எதிர்த்து
வருவதைத் தமிழுலகம் நன்கறியும். இக் கழகம்
இன்றேல் தமிழ் இன்று இந் நிலையில் இருந்திராது.
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளும்
நடந்திரா.
-
"செந்தமிழ்ச் செல்வி" செப்பிடெம்பர்
1979 |