தமிழ்நாட்டிற் பொதுவாக முதுவேனிற் காலத்தில்
தாங்கொணா வெப்பமிக்கு,
மருத நெய்தலையும் வாட்டி வருத்துவது தொன்று தொட்ட
மரபே. ஆயின், கடந்த வேனிலில் ஏனையோர்க்
கெல்லாம் உடம்பு மட்டும் தாக்குண்ண, தாமரைச்
செல்வர். திரு. வ. சுப்பையா (ப்பிள்ளை) அவர்கட்கு
உட்கரணமும் தாக்குண்டது மிகமிக இரங்கத்தக்கதாகும்.
இல்லெனில் கடந்த "செந்தமிழ்ச் செல்வி"
(சிலம்பு:
52 ; பரல்: 9)-ல் "தமிழில் பல துறை அறிவியல் நூல்களை
ஆக்கும் முறை" என்னும் தலைப்பில் குழப்பமான,
அறிவுக்குப் பொருந்தாத பல போலிக் கருத்து
களை வெளிப்படுத்தியிரார்.
மேலையறிஞர் திங்கள் செவ்வாய் மண்டிலங்களையடுத்தும்,
மேலை மொழிகளில் புதுப்புதுப் பல்துறை அறிவியல்
நூன்மணிகள் மேன் மேலுங் குவித்து வருவதும்
ஏனையோரும் ஏற்கனவே அறிந் தனவே.
தமிழில் அறிவியற் கலைக்குறியீடுகள் போதிய
அளவிற்கு ஆக்கப் படவில்லையென்பதும், அரசும்
பல்கலைக் கழகங்களும் இதில் ஒரு சிறிதும் அக்கறை
கொள்ளவில்லை யென்பதும், இந் நிலைமை நீடிப்பின்
தமிழினம் இருளில் அழுந்தும் என்பதும் அறிந்தே
உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தாமரைச் செல்வர்ர் ஊக்கியதுமில்லை;
அதன் மாநாடுகளில் உருக்காட்டியதுமில்லை.
பிற நாடுகளிற் கல்விவாயில் எம்மொழி யென்பதும்,
அதன் அமைப்பு எத்தகைய தென்பதும், அந் நாடுகட்குச்
சென்றுதான் அறிதல் கூடும் என்பதில்லை.
ஞாலநூல் (geography),
வரலாற்று நூல், மொழிநூல், செய்தித்தாட்கள்
ஆகியவையே செவ்வனே அறிவிக்கும்.