பக்கம் எண் :

செந்தமிழ்ச்செல்விக்குஉட்கரணம்கெட்டதா?41

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும், திரு. வ. சுப்பையா (ப்பிள்ளை) அவர்களும் தனித்தமிழை விரும்புவதாகப் பன்முறை விளம்பரஞ் செய்தும், இன்னும், "மட்டிட்டது" என்பதை "லிமிடெட்" என்றும், உரிச் சொற்றொகுதிகளிலுள்ள அறிவன், காரி என்னும் சொற்களைக் கையாளாது புதன், சனி யென்னும் வடசொற்களையே வழங்கியும் வருகின்றதை யாவரும் அறிவர்.

தாமரைச் செல்வர்ர் திரு.வ.சு. அவர்கள் மறைமலையடிகளொடும் நம்மொடும் பழகியும், அடிகள் விழாவை ஆண்டுதொறும் கொண்டாடியும், எம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளைச் செல்வியில் வெளியிட்டும், கலவை மொழியை விரும்புவது,

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்"
(குறள். 373)

என்னும் குறளுக்கே இலக்காகும்.

மும்மொழிப் புலமை முற்றத் துறைபோகி அரும்பாடு பட்டு ஆரிய மறை பயின்று தனித்தமிழைத் தகைபெற நாட்டிய நிறைமலை யாம் மறைமலையடிகளும், அரை நூற்றாண்டு சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்த யானும், திரு. வ. சுப்பையா(ப்பிள்ளை)யும், திரு. வா.செ. குழந்தைசாமியும் அறிந்ததாகக் கூறும் உண்மைகளை அறியாதவர்கள் அல்லர்.

- தென்மொழி ஆடவை 1978