திருக்குறளுரைகள்
எத்தனையோ, அவை புலப்படுத்திய சிறப்பு நயங்கள்
என்னென்னவோ, அறியோம்.
பொதுவாக, பாட்டிற்கும் நூலிற்கும், குறிப்புரை,
சொல்லுரை, சொற்றொடருரை, பொழிப்புரை,
கருத்துரை, சிற்றுரை, விரிவுரை (பேருரை,
விளக்கவுரை) என உரைகள் எழுதிறப்படும். அவை
முழு நூற்குமோ, அதன் ஒரு பகுதிக்கு மட்டுமோ
இருக்கலாம். பகுதியுரையும், தொடர்ச்சியான
ஒரு பகுதிக்கோ, அங்கு மிங்கும் தெரிந்தெடுக்கப்பட்ட
சில பல பாவிற்கோ இருக்கலாம்.
எண்வகை வனப்பாக வகுக்கப்படும் நூற்றுக்கணக்கான
பனுவல் வகைகளும், இசை நாடகம் கணியம் மருத்துவம்
அறிவியல் கம்மியம் முதலிய அறமல்லாத பிற
நூல்களுமாயின், ஆசிரியன் வரலாற்றுத் தொடர்பின்றியே
பெரும்பாலும் மூலமும் உரையும் இயலும். நல்வழியும்
திருக்குறளும் போன்ற அறநூலாயின், ஆசிரியன்
தன் வாழ்க்கையிற் கடைப்பிடித்த நெறிமுறைகளையே
அவன் நூலும் மறுநிழலிட்டுக் காட்டுதலால், ஆசிரியன்
வாழ்க்கை வரலாறு அவனியற்றிய அறநூலொடு
வெளிப்படையாகவோ குறிப்பாகவோ இரண்டறப்
பின்னிக்கிடக்கின்றது. இதனால், திருவள்ளுவரின்
வாழ்க்கைச் செய்திகள் பல அவரியற்றி
யருளிய திருக்குறளாலேயே விளக்கம் பெறுகின்றன.
இதை யுணர்ந்தே திரு. மகராசனாரும், திருவள்ளுவர்
ஒப்புயர் வற்ற உலகப் பொது அறநூலாசிரியராதலாலும்,
அவர் பெருமையும் தலைமையும் தமிழ்ப் பகைவரால்
இயன்றவரை மறைக்கப்பட்டு வருத லாலும், அவரைப்
பின்பற்றிப் போற்றுவதனாலேயே தமிழர் தம்
ஆரிய அடிமைத்தனத்தினின்று மீண்டு தம்
முன்னோர்போல் முன்னேற முடியுமாதலாலும், ஆசிரியர்க்கே
சிறப்புக் கொடுத்துத் தம் சின்னூற்குத் திருவள்ளுவர்
என்றே பெயரிட்டு, அவர் அருமை பெருமைகளை அகச்சான்று
கொண்டே விளக்கிக் காட்டுகின்றார்.
மகராசனார்
திருவள்ளுவரின் சிறப்பியல்கள்
இதுவரை ஏனை யுரையாசிரியர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும்
புலனாகாது, திரு. மகராசனார்க்குப் புத்தம் புதுவதாகத்
தோன்றிய திருவள்ளுவர் எழு சிறப்பியல்கள்
வருமாறு:
1.
இம்மையையும் மறுமையையும் ஒன்றாயிணைத்தவர்
இதுவரை உலகில் தோன்றிய பல்வேறு மதத்
தலைவரும் குரவரும், உலகியலையும் மதவியலையும்
இருவேறாகப் பிரித்து இம்மை யையும் மறுமையையும்,
வெவ்வேறுலகத்திலும் வெவ்வேறு காலத்திலும்
ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் இருவேறு
வாழ்க்கை நிலைகளாகவே கூறியுள்ளனர். திருவள்ளுவரோ,
அவ் விரண்டும் இம்மையிலேயே இவ்வுலகத்திலேயே
|