பக்கம் எண் :

தீர்ப்பாளர்மகராசனார்திருவள்ளுவர்55

"மகன்றந்தைக் காற்றும் உதவி யிவன்றந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்"(70)

இல்வாழ்வான்-துறவி

"துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை" (42)

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்" (28)

தாளாளன்-சோம்பேறி

"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்" (616)

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை" (594)

"நெடுநீர்ர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார்ர் காமக் கலன்" (605)

இங்ஙனமே ஏனையவும்.

5. மக்களெல்லாரையும் சான்றோராக்கத் திட்டமிட்டவர்

ஒருவன் இளமையிற் கல்லாதவனாயினும் கற்றோரையடுத்து அவர் சொற்பொழிவுகளை ஒழுங்காகக் கேட்டும் கல்விமானாகலாம் அல்லது அறிவடையலாம் என்பதை,

"கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்(கு)
ஒற்கத்தின் ஊற்றாந் துணை" (414)

"செவியுணவிற் கேள்வி யுடையார்ர் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர்ர் நிலத்து" (413)

என்னுங் குறள்களால் பெறவைத்தார் திருவள்ளுவர். இனி, அவர்,

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு", (452)

"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்" (455)

என்றும் கூறினார்.

நல்லோர் கூட்டுறவால் ஒருவன் நல்லோனாகலாம் என்பதை, பின்வரும் ஆங்கிலப் பழமொழிகளும் தெரிவிக்கும்.