பக்கம் எண் :

தீர்ப்பாளர்மகராசனார்திருவள்ளுவர்63

"அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு"

என்று கொடிஞாழன் மாணிபூதனார் பெயரிலும்,

"ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்ர் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவர் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று"

என்று கோதமனார்ர் பெயரிலும், பதினாறு வெண்பாக்கள், திருக்குறளின் தனிநிலையையும் முதன்மையையும் பொதுமையையும் தலைமையையும் திட்டவட்டமாய்த் தெரிவிப்பனவாகத் திருவள்ளுவ வெண்பா மாலையி லேயே இருத்தல் காண்க.

இனி,

"ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேத முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்ர்
ஓது குறட்பா வுடைத்து"

"செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
அதற்குரிய ரந்தணரே ஆராயி னேனை
இதற்குரிய ரல்லாதா ரில்"

என்று, முற்றும் உரிமையருமாகாது அடிமையருமாகாது நடுநிலையாளர் போல் நடித்த நெஞ்சுரமிலிகள் இருவர் பாக்களும் திருவள்ளுவ வெண்பா மாலையில் உள.

2. ஆரியத் தொடர்பற்றது

துறவறவியல் வீடு நோக்கிய தாதலாலும்,

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்"
(46)

என்னும் குறட்படி இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பது தமிழக் கொள்கையாதலாலும், சிவனடியார்ர் அறுபத்து மூவருட் பெரும் பாலார் இல்லறத்தில் நின்றே வீடுபெற்றதாகப் பெரியபுராணங் கூறுவ தாலும், இன்பத்துப்பாலும் திருக்கோவைபோல் அல்லகூறியாய் (Allegory) உட்கருத்து விளக்கம் பெற இடமுண்மையாலும், திருக்குறள் முப்பாலில் நாற்பொருளுங் கூறும் நிறைநூல் என்பதே உண்மையாம்.