பக்கம் எண் :

64பாவாணர் நோக்கில் பெருமக்கள

இனி, பொய்யுடை யாரியர் சொல்வன்மையினாலும் மெய்யுடைத் தமிழர் சொலமாட்டாமையாலும், நாற்பொருட் பாகுபாடே ஆரியர் வகுத்த தென்றும், அகம் புறம் என்பதே தமிழர் பொருட் பாகுபாடென்றும், இன்றும் "தமிழ்ப் புலவர்" பலர் கருதிக்கொண்டுள்ளனர். அகம் புறம் என்பது பொருளிலக்கணப் பாகுபாடேயன்றி, அறநூற் பாகுபாடன்று; ஒவ்வொரு நூலிலும் பொருட்கேற்பப் பாகுபாடு வேறுபடும்.

எ-டு:

நூல்வகை பாகுபாடு
பொருளிலக்கணம்
அகம்,புறம்.
அறநூல் அறம், பொருள், இன்பம், வீடு.
ஏரணம் பொருள், குணம், கருமம், ஒற்றுமை,சிறப்பு, பொதுமை, இன்மை.
கொண்முடிபு (சித்தாந்தம்)
கடவுள், கட்டுணி, கட்டு
(பதி,பசு, பாசம்).

இனி, இலக்கண நூற்குள்ளேயே, உயிர், மெய்,உயிர்மெய் (பிராணி - animal) என்பது எழுத்ததிகாரப் பாகுபாடு; பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பதும், உயர்திணை, அஃறிணை என்பதும், சொல்லதிகாரப் பாகுபாடு. நாற்பொருளுள் இம்மைக்குரிய முதன் மூன்றும் மூன்றன் பகுதியெனப்படும்.

"மூன்றன் பகுதியும்" (தொல். அகத். 41)- இதையே வடவர் திரி வர்க்கம் என்றனர். வேத ஆரியர் வழிபட்டவை, வானம், நிலமகள், ஐம்பூதம், கால நிலைகள், கோள்கள், ஆவிகள், இறந்த முன்னோர், சோமக்கள் முதலிய சிறு தெய்வங்களே; அவற்றுட் சில அஃறிணைப் பொருள்களே. முத்தொழில் இறைவனேயன்றிக் கருதுகோட் சிறுதெய் வங்களும் முன்னோராவிகளும் வீடுபேறு நல்கா. வேத ஆரியர் தமிழ ரொடு தொடர்புகொண்டு சிவநெறியும் திருமால் நெறியுமான தமிழ் மதங்களைத் தழுவிய பின்னரே, அறம் பொருள் இன்பம் வீடென்னும் தமிழ அறநூற் பாகுபாட்டைத் தர்மார்த்த காம மோட்சமென்று வட மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டனர்.

இனி, திருமால் மதத்தைக் கடைப்பிடித்த ஆரியக் கண்ணனை ஒரு தோற்றரவு (அவதாரம்) ஆக்கியபின் இயற்றிய பகவத் கீதையும், நுண்வலக்காரமாகப் பிறவியொடு தொடர்புபடுத்திய நால்வருணப் பாகு பாட்டையும் பிராமண வுயர்த்தத்தையுமே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், வேதம் போன்றே திருக்குறளினின்று வேறுபட்ட தும் அதை ஒவ்வாததுமாகும்.

"The fourfold caste was created by Me, by the differentiation of Guna and Karma." (பக. கீ.4:13)