"Of
Brahmanas and Kshatriyas and Vaishyas, as also of Sudras, O Scorcher of foes,
the duties are distributed according to their Gunas born of their own
nature."
(பக. கீ.
18: 41.)
அறம்,
பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பற்றிய
தமிழர் கருத்தும் கொள்கையும், ஆரியத்தினின்று
முற்றும் அல்லது பெரிதும் வேறுபட்டவையாகும்.
|
பொருள்
வகை
|
தமிழம்
|
ஆரியம்
|
|
அறம்(தருமம்)
|
ஈகை
அல்லது நல்வினை.
|
அடிப்பட்ட
வழக்கு அல்லது
பிறவிக்குல ஒழுக்கம்
(வருணாசிரம தருமம்),
கடமை.
|
|
பொருள்
(அர்த்தம்)
|
அறவழியில்
ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தொழிலாற்
பொருளீட்ட அரசன் துணையாயிருந்து, தானும் தன்
காப்புத் தொழிலாற் பொருளீட்டல்
|
அரசியல்
தொழில் அல்லது கலை. (Political Science)
|
|
இன்பம்
(காமம்)
|
ஒருகணவ
ஒரு மனைவி அறவழி இருதலைக் காதலின்பம்.
|
விலங்கியற்
காமவின்ப நுகர்ச்சி.
|
|
வீடு(மோட்சம்)
|
இல்லறத்தாலும்
துற வறத்தாலும் எல்லாரும் பெறத்தக்கது.
|
துறவு
நிலையாற் பிராமணன் மட்டும் பெறத்தக்கது.
|
நாற்பொருளுங் கூறும் நூல் "திருக்குறள்" ஒன்றே. அதுபோன்ற
தொன்று வடமொழியில் இல்லை.
நாற்பொருளும் தனித்தனி கூறும் தமிழ் நூல்களுள் பொருள்
நூல்கள் இறந்துபட்டன.
"மாரணம்
பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள"
(தனிப்பா :)
3.
தமிழப் பண்பாட்டின் உயர்வு காட்டுவது
எ-டு:
"ஒழுக்கம்
உடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்."
(குறள்.
133)
"ஈன்றாள்
பசிகாண்பா னாயினும் செய்யற்க
|