பக்கம் எண் :

தீர்ப்பாளர்மகராசனார்திருவள்ளுவர்67

5. சில சிறப்புக் குறிப்புகளைச் சேர்த்தல்.

"காமத்துக் காழில் கனி" என்னும் தொடர்பற்றிய குறிப்பும்; திரு வள்ளுவர் நகையாடியும், வினைவிலக்கியும், குற்றங் கூறியும், விளைவு கூறி எச்சரித்தும், அறிஞர் செயலை எடுத்துரைத்தும், உவமை கூறியும், கடிந்துரைத்தும், சினந்தும் வைதும், சாவித்தும் பல்வேறு வகையில் தீயோரைத் திருத்துகின்றார் என்பதும் ஆராய்ச்சியைத் தூண்டுவனவே.

திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளைத் தெரிவித்தி ருப்பதும், T.K. சிதம்பரநாத முதலியாரின் இரண்டொரு குறள் விளக்க வுரைகளை எடுத்துரைத்திருப்பதும், உலக மரக்கறியூண் மாநாட்டு விடைமுகவர் கோவை வரவையும் திருவள்ளுவரைப் பாராட்டியதையும் குறித்திருப்பதும், சிறப்புக் குறிப்புகளாம்.

முடிபு

ஆங்கிலங் கற்ற தமிழர் அனைவரும், திரு. மகராசனார் Tiruvalluvar" என்னும் ஆங்கிலச் சின்னூலை வாங்கிப்படிக்க. விலை 2 உருபாதான்.

ஏற்கெனவே தமிழ்நாட்டிற் பரவியுள்ள திருவள்ளுவர் திரு வுருவப் படத்தில் வடநாட்டு ஆரியச் சாயை கலந்திருப்பதால், பட விற்பனையாளர் திரு. மகராசனாரின் ஆங்கிலச் சுவடிப் படத்தையே இனிமேற் பெரிதாக்கி நாடு முழுதும் பரப்புவாராக.

- "செந்தமிழ்ச் செல்வி" சனவரி, பெப்பிரவரி 1980