பக்கம் எண் :

திருவள்ளுவரும்பிராமணியமும்-மதிப்புரை71

பேரா. கோ. இராமச்சந்திரன், எம்.ஏ., தமிழ்த்துறைத் தலைவர், பச்சை யப்பன் கல்லூரி, காஞ்சிபுரம்-3, என்னும் முகவரிக் கெழுதிப் பெற்றுக் கொள்க. ஆங்கிலங் கற்ற தமிழர் அனைவரும் இதை வாங்குதல் தக்கதாம்.

ஆயிரக்கணக்காகச் சம்பளம் பெறும் பெரும் பதவித் தமிழ்ப் பேராசிரியர் "எங்கெழிலென் ஞாயி றெமக்கு" என்றிருப்பவும், தமிழைப் பழிக்கும் ஒரு நூலைக் கண்டித்துத் தமிழ்ப் பெருமையைக் காத்த தலைமையாசிரியரைத் தமிழ்நாட்டு அரசும் பல்கலைக்கழகங்களும் போற்றக் கடப்பாடுடையன. அவை அது செய்யாது போயினும், உலகத் தமிழ்க் கழகம் இவ்வாண்டிறுதியில் நடைபெறும் ஆட்டை விழாவில் அவரைப் பாராட்டி, "திருக்குறட் காவலர்" என்னும் பட்டமும் அளிக்கும் என உறுதி கூறுகின்றேன்.

- "செந்தமிழ்ச் செல்வி" மே 1970