என்னும்
ஏழு பிரிவாக வகுத்துள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கட்டுரை வடிவிலுள்ளது. முதற் கட்டுரைக் கூற்றுகளை
மற்ற ஆறும் பகுதி பகுதியாக மறுக்கின்றன.
இரண்டாம் பிரிவில், திருவள்ளுவர் தமிழ முறைப்படி
இல் வாழ்க்கை, துறவு என்னும் இருவகை அறவாழ்க்கை
நிலைகளையே அறத்துப்பாலில் வகுத்துக் கூறியுள்ளாரென்றும்;
ஆரிய அல்லது பிராமண வாழ்க்கையின் நால் நிலையுள்
முதலதான பிரமசரியம் அடி யோடு விடப்பட்டுள்ளதென்றும்,
கிருகத்தன் இன்றியமையாது கடைப் பிடிக்க வேண்டிய
வேதமோதுதலும் எரியோம்பலும் கூறப்படவேயில்லை
யென்றும், இல்லறத்திற்கு இன்றியமையாத
விருந்தோம்பலறம் பிராம ணர்க்கு நெறியிடப்பட
வில்லை யென்றும், துறவுநிலை இல்வாழ்க்கையின்
தொடர்ச்சியாகாது தனிப்பட்ட தென்றும்;
மனைவியோடு காட்டில் வாழும் வானப்பிரத்தம்
துறவு நெறியன்மையின் கொள்ளப்படவில்லை யென்றும்,
துறவுநிலை வானப் பிரத்தமும், சந்நியாசமும்
என இரண் டாகாது ஒன்றேயென்றும், இருவகைத் தமிழ
அறவாழ்க்கையும் எல்லார்க் கும்
பொதுவாயிருக்க, நால்வகை ஆரிய நிலையும்
பிராமணர்க்கே சிறப்பாக வுரியவென்றும்; திருக்குறள்
அறத்துப்பால் இங்ஙனம் இம்மியும் ஆரியச் சார்பில்லதென்றும்,
விளக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பிரிவில், திருவள்ளுவர் ஆரியத்திற்கு
மாறாகவே நூலியற்றி யிருக்கவும், பரிமேலழகர்
அதற்குச் சார்பாக அதை இயற்றி யிருப்பதாகக்
கூறியிருப்பது காட்டப்பட்டுள்ளது.
நாலாம் பிரிவில், 38ஆம் குறள் மனுதரும சாத்திரம்
5ஆம் அதிகாரத்திலுள்ள 155 அல்லது 156ஆம் சொலவத்தை
யொத்த தென்றும், 166ஆம் குறட்கருத்து மகாபாரதப்
பீடும பருவத்திலுள்ள தென்றும், 259 ஆம் குறள்
மனுதரும சாத்திரம் 5ஆம் அதிகாரத்தி லுள்ள 53ஆம்
சொலவத் தொடு ஒப்பு நோக்கத்தக்க தென்றும்,
வரலாற்றாசிரியர் கூறியுள்ளது மறுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பிரிவில், திருக்குறள் தமிழ்நாட்டுப்
பிராமணரைப் போற்றுகின்ற தென்னுங் கூற்றுப்
பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் பிரிவில், 501ஆம் குறள் சாணக்கியரின்
அருத்த சாத்திரத்தைப் பின்பற்றியதென்னுங்
கூற்றின் புரைமை காட்டப் பட்டுள்ளது.
ஏழாம் பிரிவில், இக்காலக் குலப்பிரிவு அக்காலத்திலில்லை
யென்பதும், திருவள்ளுவர் குலம் இன்னும் அறியப்படவில்லை
யென்பதும், தெரிவிக்கப்பட்டுள்ளன.
அழகிய நடையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட
இவ் வரிய நூல், பகுதி (Demy)
யளவில் வழுவழுப்பான வெண்டாளில், முகவுரையுட்பட,
55 பக்கங் கொண்டுள்ளது. விலை 1 உருபா. பொத்தகம்
வேண்டுவோர், |