பக்கம் எண் :

18பாவாணர் உரைகள்

றார்கள். "எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே" என்று மனோன்மணியம் சுந்தரனார் சொல்கிறார். அப்படிப்பட்ட தமிழ், மேனாடுகளுக்கெல்லாம் தலைமை யானது. அப்படிப்பட்ட மொழியை நீ தாழ்வாகக் கருதிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இந்த அகரமுதலியில் என்ன செய்திருக்கிறார்களென்றால் தமிழை எவ்வளவு தாழ்த்த வேண்டுமோ அவ்வளவு தாழ்த்தி வைத்தி ருக்கிறார்கள். அதில் தமிழ்ச் சொற்கள் பல இல்லவே இல்லை. தென் சொற்களை வடசொற்களாகக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு மேலே சொற்களுக்குத் தவறான பொருள்களை உரைத்திருக்கிறார்கள். சாமை என்ற பொருள் ஒன்று இங்கு விளைகிறது. அது வடநாட்டில் விளை வதேயில்லை. தொன்று தொட்டு தென்னாட்டிலே விளைந்து வருகிறது. வேத ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து புகுந்த உடனேயே தமிழகத் தோடு தொடர்பு வைத்துக் கொண்டார்கள். எதற்கென்றால் சமற்கிருதத் துக்கோ, பிராமணர்களுக்கோ ஓர் உயர்வு வேண்டுமென்றால் இந்தியா முழுதும்தான் அவர்கள் உயர்வைப் புகுத்த வேண்டும். ஓர் இடத்தி லேயே உயர்வைப் புகுத்தி, இன்னொரு இடத்திலே உயர்வைப் புகுத்தா மல் இருக்க முடியாது. அதற்காக வேத காலத்தில் அவர்களுக்குத் தொடர்பிருந்தது இங்கே. வேதத்திலேயே தமிழ்ச் சொற்கள் இருக் கின்றன. வேதத்திற்கு முன்பே தமிழ்ச் சொற்கள் உண்டு. அதற்குக் கரணியம் என்னவென்றால் தமிழர்தாம் தெற்கேயிருந்து வடக்கே சென்று திராவிடராகத் திரிந்தார்கள். பிராகி என்ற மொழி வடக்கே போகப் போகச் சிறுபான்மை மொழியாகியது. அதிலும் பெரும்பாலோர் மலைவாழ்நர்களாக இருப்பதால், பல மேனாட்டறிஞர்கள் பின்வருமாறு தவறாகக் கருதுகின்றார்கள். இவர்கள் மலைவாழ்நர்களாக இருப்பத னாலும், இவர்களது மொழியானது திருந்தாமல் இலக்கியம் இல்லாததாக இருப்பதனாலும் இதுதான் முந்திய நிலைமையைக் குறிக்கிறது என்கி றார்கள். இல்லவே இல்லை; இது தவறு. அவர்கள் கீழே வாழ்ந்தவர்கள் தாம். அந்தக் காலத்திலேயே போரும் கொள்ளையும் ஏற்பட்டு அடிக்கடி காப்பிற்கு இடமில்லாமல் இருந்ததினாலே அவர்கள் மேலே போய் வாழ்ந்தார்கள். எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன். பிராகியிலே, "பார்க்கு" என்பது வாய் என்று பொருள்படுகிறது. வாய்கள் என்பது "பார்க்" என்று குறுகுகிறது. வாய்கள் என்றால் வழி என்ற பொருளுடையது. வருவாய் என்று சொல்கிறோம். வருவாய் என்றாலும் வரும்வழி என்றாலும் ஒன்று. உணவு புகுகிற வழி வாய்(வழி).

இந்த "கள்" என்பது கள்ளுதல், கள்ளுதல் என்றால் கலத்தல், கள்ள, கடுப்ப என்பன தொல்காப்பியத்தில் உவம உருபுகள். கள்ளுதல் என்றால் பொருந்துதல் அல்லது கலத்தல். அதுதான் கள் என்று பெயர். "அம்" விகுதி சேர்ந்தது. களம் என்றால் கூட்டம்; போர்க்களம் என்று சொல்வதில்லையா. அக்காலத்தில் பல பொருள்கள் ஒன்றாகக் கலப்பதற்குக் "கள்" என்ற பன்மை