|
விகுதியைச் சேர்த்தார்கள். இந்த
"பார்க்" என்பது எப்படியிருக்கிறது பாருங்கள். எவ்வளவு
கெட்டுப்போயிருக்கிறது. இப்படியே சொற்களைச்
சொல்லிக் கொண்டே போனால் நேரமாகும். ஓரரிசிப்
பதமாக எடுத்துச் சொல்கிறேன். ஆகவே இப்படியாக
மொழி திரிந்துகிடக்கிறது. மேனாட்ட வர் வரலாற்றை
ஒட்டி மொழியை ஆராயாமல் திடுமென்று மலைவாழ்நர்
களெல்லாம் பழங்குடி மக்கள் என்று தவறான கருத்தைக்
சொல்கின் றனர். அப்படியானால் நாளைக்கு நாம்
கொடைக்கானல் போனாலும்கூட நாமும் பழங்குடி
வாசிகள் என்று சொல்லிக் கொள்ளுவது நேரத்தான்
செய்யும். ஆகவே இந்த அகர முதலியில் என்ன செய்திருக்கின்றார்கள்
என்றால் இப்படி "சாமை" என்பதைச் "சியாமா" என்று திருத்தி
அதற்குக் "கருப்பானது" என்று பொருள் காட்டியிருக்கிறார்கள்.
சாமை உமியும் கருப்பன்று; அரிசியும் கருப்பன்று, இது
பொருந்துமா? என்று கேட் கிறேன். சில தமிழ்ச்
சொற்களைச் சமற்கிருதம் என்றவுடனே சிலர்
தலைமையாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சமற்கிருதம்
எது தெரியுமா? வேத ஆரியம் (Vedic
Language) என்று ஒரு மொழி இருந் தது. அதற்கு
வைதிக ஆரியம் அல்லது வேத மொழி என்று பெயர். அந்த
வேத ஆரியம் வழக்கற்றுப் போனது. ஏனென்றால் அவர்கள்
சிறுபான்மையினராக இருந்தார்கள். இந்தப் பெரிய
திராவிட மக்களோடு கலந்தபின் கடலிலே காயம்
கரைத்தது போல ஆகி விட்டது. அதனால் அவர்கள் வழக்கற்றுப்
போன மொழியில் இலக்கியம் அமைப்பதற்கு ஏற்ற
சொற்கள் இல்லாமையினாலே அக்காலத்து வழங்கிய
வட்டார மொழிகளிலிருந்து (Regional
Languages) ஏராளமான சொற்களைக் கலந்து
கொண்டார்கள். அப்போது தலைமையாயிருந்தது தமிழ்தான்.
அந்தக் காலத்து வட்டார மொழிகளுக்குத்தான்
(Regional Languages)
"பிராக்ருதம்" என்று பெயர், "பிரா" என்றால்
முன்னாலே, "கிருதம்" என்றால் செய்யப்பட்டது. சமற்கிருதம்
என்பது வழக்கற்றுப் போன வேதமொழியோடு அக்காலத்தில்
வழக்கிலிருந்த வட்டார மொழிக ளெல்லாம் சேர்த்து
ஆக்கிக் கொண்ட அந்தச் செயற்கை இலக்கிய
மொழியில்தான் அந்தச் சமற்கிருதம் வந்தது. அதன்
பொருள் நன்றாகச் செய்யப்பட்டது என்பது. வேத ஆரியம்
வேறு. சமற்கிருதம் வேறு. பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
வேத ஆரியமும், வேத சமற் கிருதமும் ஒன்றுதான் என்று.
இஃது "என் பாட்டன் திருமணத்திற்கு நான் பாட்டுக்
கட்டினேன்" என்பது போலுள்ளது. ஆகவே இப்படித் தவறான
சில முடிவுகள் இருக்கின்றன. சமற்கிருதச் சொற்களை
ஆய்ந்து பார்த்தீர்களானால் ஒரு பகுதிச்
சொற்கள் எல்லாம் தமிழாக இருக்கும். வடிவு
மாறியிருக்கும். அவற்றை எல்லாம் விளக்க எனக்கு நேரமில்லை.
ஆகவே "சியாமா" என்ற அந்தச் சொல்லை அப்படித் திருத்தி
விட்டி ருக்கிறார்கள்.
ஆமைவடை என்று சொல்கிறார்களே, ஆமை
போல மேல்வளைவு (Convex)
இருப்பதினாலே அதற்கு அப்பெயர். ஆமைத் தாலி,
ஆமைப்
|