|
பூட்டு என்ற வழக்குச் சொற்களெல்லாம்
இருக்கின்றன. இதை என்ன செய்திருக்கிறாரென்றால்,
"ஆம" என்ற ஈறாக்கி அது சமற்கிருதச் சொல் என்று
காட்டியுள்ளனர். பொருந்தப் புளுகல், பொருந்தாப்
புளுகல் என்ற உத்திகள்பற்றி ஏராளமான தமிழ்ச்சொற்களை
யெல்லாம் - தென் சொற்களை யெல்லாம் - வடசொல்லாக்கி
யிருக்கிறார்கள். அதிலே "ஆம" என்ற சொல்லுக்கு "நன்றாக
வேகாதது" (Not well boiled)
என்று பொருள் எழுதியிருக்கிறார்கள். இது எங்கேயாவது
உண்டா? வேகாத வடை எங்கேயாவது விற்கிறார்களா?
விற்றால் வாங்கித் தின்பார்களா? ஒரு தடவை ஏதோ
படபடப்பிலே, அரை வேக்காட்டிலே, "தின்கிறவன் இன்னொருவன்
தானே; நமக்குக் காசுதானே வருகிறது" என்று ஏமாற்றிக்கொண்டு
போனாலும், நாள்தோறுமா அப்படி அரை வேக்காட்டில்
கொண்டு வருவான்? அப்படி ஓர் இடத்திலே ஒருவன் திருட்டுத்தனம்
செய்தாலும், இருக்கிறவர்கள் எல்லாமா திருட்டுத்தனம்
செய்வார்கள்? நாடு முழுவதும் இருக்கிறவர்கள் தின்கிறவர்கள்
ஏமாளிகளாகவா இருக்கிறார்கள்? காசைக் கொடுத்துவிட்டு,
இப்படி எழுத வைத்திருக்கிறான் வேண்டுமென்றே.
"வரால்" என்றால் "குரவை" என்று எழுதி வைத்திருக்கிறார்கள்
ஏன் தெரியுமா? அங்கே இருந்தவர்களெல்லாம் ஊன்
உணவு உண்ணாதவர்கள். கறிக்கடையைக் கனவிலும் காணாதவர்கள்.
ஆகவே, அவர்களுக்குப் புலாலுணவு பற்றிய சொற்களே தெரியாது.
மேனாட்டிலே அகரமுதலி தொகுப்பதாயிருந்தால் இந்த
இடர்ப்பாடே இல்லை. ஏனென்றால் பெரும் பாலோர்
ஊன் உணவினர். மரக்கறி உணவினர் என்ற வேறுபாட்டிற்கு
இடமில்லை. இங்கே அது இருக்கிறது. அதனாலே "வராலை"க்
குரவை என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
"தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக்கொளக் கொடா விடத்தது மடற்பனை"
என்று நன்னூலில் இருக்கிறதே அது பெண்
பனையாக இருக்குமோ, ஆண் பனையாக இருக்குமோ
சொல்லுங்கள் பார்க்கலாம்? அதற்கு ஆண் பனை என்று
நன்னூலின் நூற்பாவையே மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்கள்.
அதுதான் அதில் வேடிக்கையானது. 1924ஆம் ஆண்டு ஆம்பூரிலே
நான் ஆசிரியனாக இருந்தேன். அப்போது நாட்டியல்
(தேசியப்) போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சீனிவாச
மூர்த்தி என்ற ஒருவர் என் அறையிலே உடனுறைந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் வேடிக்கையாக ICS.
தமிழ் எப்படிப்பட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
I.C.S தமிழ் எப்படியிருக்கும்
தெரியுமா? அங்கு என்ன செய்வார் கள் தெரியுமா? "Give
the Tamil meanings of the following words," என்று ஒரு
கேள்வி இருக்கும். அதிலே அவன் "யானை" என்று கேட்
டிருப்பான். அதற்கு இவன் "Pig"
என்று எழுதி வைப்பான். அப்போது திருத்தாளர் என்ன
|